நன்மதி வெண்பா - நூல் - பாடல் 83

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

விதிப்பயனன் றாங்காலம் வெங்கா னடைந்தும்
மதிப்புடைய பல்பொருளும் வாய்க்கும் - விதிப்பயன்றான்
தீதுறுங்காற் செம்பொற் றிடருறினும் நன்மதியே;
ஏது முறலரிதென் றெண்! 83

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (5-Feb-25, 8:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே