Sam Saravanan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sam Saravanan |
இடம் | : Bangalore |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 2866 |
புள்ளி | : 137 |
தாயையும் தமிழையும் என்னொடியும் நேசிப்பவன்
—————————-
தனித்தனி அறைகள்
இல்லாத வீடு..
ஆங்காங்கேப் பெயர்ந்து
சமமில்லாத் தரைத்தளம்..
புதியதும் பழையுதுமாய்
வண்ணங்கள் கலைந்தக்
கோரைப் பாய்கள்..
ஓரத்துணியில்லாதவை கீழும்
ஓரத்துணியுள்ளவை மேலும்
ஒன்றாய் இணைந்து..
பல வண்ணங்களில்
குட்டிக் கெட்டித்
தலையணைகள் வரிசையாய்..
சில இரவுகளில்
தென்னைமரச் சட்டங்கள்
அதன் மேலடுக்கிய
சிவப்பு ஓடுகள்..
சில உடைந்து..
அவை அனுமதிக்கும்
மழை நீர்த்துளிகள்
சொட்டு சொட்டாய்த்
தெறித்ததும் அதையேந்தும்
சிறியப் பாத்திரங்கள்..
சில இரவுகள்
அம்மாவை அணைத்து..
சில இரவுகள்
அக்காக்களுக்கு இடையில்..
ஒலிச்சித்திரம் முடிந்ததும்
சட்டென்று வரும்
ஓர் உறக்கம்..
தாய் வீடு
————
பெண் மட்டுமல்ல
ஆணும் ஏங்குவான்
பண்டிகை நாளில்
தாய் வீட்டிலிருக்க..
பணத்தைத் தேடி
பலமைல் தாண்டி
பணிச்சுமை சுமக்கும்
பல செல்வன்கள் மட்டும்
பண்டிகை நாளில்
பறந்து செல்வர்
தாய்வீட்டைத் தேடி..
தாய் மகள் உறவில்
பேச்சு மிகுந்திருக்கும்..
தாய் மகன் உறவில்
பாசம் மிகுந்திருக்கும்
அம்மகன் எம்மனிதனாயினும்..
தாயின் தனிமை
மகன் மட்டுமுணர்வான்..
மகனின் தனிமை
தாய் மட்டுமுணர்வாள்..
மற்றவர் அறியா
அத்தனிமை உணர்வு
மடிந்தே போகும்
அவ்விருவர் மனதில்..
லட்சங்கள் இறைத்து
பல மாடிகள் கட்டி
பல குடிகள் அமர்த்தி
தன் தா
—————
என்னுடன் இணைந்து
பதினேழாண்டுகள் இருக்கும்..
சில சமயங்களில்
என் தோள்களில்..
சில சமயங்களில்
என் மடியில்..
வெகு நேரங்களில்
என் எதிரில்..
கருத்த மேனியெனினும்
கைப்பட்ட உடன்
முகம் மிளிரும்..
என் விரல்கள்
பட்டதும் அவளினுள்
அணுக்கள் நகரும்..
அவள் உடலிலும்
உஷ்ணம் கிளம்பும்..
தலை நிமிர்ந்தால்
தினம் ஒளிர்வாள்..
தலை குனிய
தன்னுள் அடங்கிடுவாள்..
இன்று இரவேனோ
எங்கள் இருவருக்கும்
நீல வண்ண
சிறு படுக்கை..
சுவரோரம் அவளை
அமரச் செய்து..
ஜன்னல் ஓரமென்றும்
நான் சொல்லலாம்..
சிறிய தலையணை
எனக்கு மட்டும்..
சிறிய போர்வையும்
எனக்கு மட்டும்..
ஆணாதிக்கமென்று கூட
நினைக்க தோன்றும்.
காதல்
கரைகாணாத மகிழ்வுக்கு
மனதை ஆட்படுத்தும்
மந்திரச் சொல்....
அகிலமே அளவில்லாத
மகிழ்ச்சியில் ஆனந்த
நடனம் புரியும்......
அழகற்றவையும் உலக
அழகியென மதுவுண்டு
அழையும் மனது.....
தேரடி வீதியினில்
தேற்றுவாரின்றி அழுவதிலும்
சுகம்காணும் மனம்.....
ஒற்றை பார்வை
தரிசனம் கிடைத்தால்
செருக்கேறும் மனம்....
தேங்கிய குட்டையாக
தெருவோரம் நின்றே
பாழாகும் வாழ்வு....
பெற்றோரின் பதைப்பும்,
நிகரற்ற பெரும்
பாசாங்காக தோன்றும்.....
இந்நோய் தொற்றுக்கு
தடுப்பு ஏதுமில்லாது
அழியும் சுவர்கள்....
சுவர்கள் இல்லாமல்
சித்திரம் வரைவது
எப்படி சாத்தியம்.....
உன் சுவாசம் கலந்த
காற்று என்னைத் தொடும்
எனில்......
புதைத்தாலும் பிழைப்பேன்
மறுபடியும்.....
கண்ணில் பதிந்த முதல் நாள்..
பேசி முதல் தருணம்......
பேச்ச றுத்த நொடி...
ஆனாலும் மறைத்த
என் நினைவுகள் உன்னில்...
இத்தனையையும்
நினைவில் கொண்டாலும்...இன்றும்
மறைக்க முயன்று தோற்ற நீ.,...
மறக்காது மனமற்ற நான்..
அட! வெளியே சொல்ல முடியாமல்..
உள்ளேயும் வைக்க முடியாத
உண்மை என்றும் உறங்காது....
—————
என்னுடன் இணைந்து
பதினேழாண்டுகள் இருக்கும்..
சில சமயங்களில்
என் தோள்களில்..
சில சமயங்களில்
என் மடியில்..
வெகு நேரங்களில்
என் எதிரில்..
கருத்த மேனியெனினும்
கைப்பட்ட உடன்
முகம் மிளிரும்..
என் விரல்கள்
பட்டதும் அவளினுள்
அணுக்கள் நகரும்..
அவள் உடலிலும்
உஷ்ணம் கிளம்பும்..
தலை நிமிர்ந்தால்
தினம் ஒளிர்வாள்..
தலை குனிய
தன்னுள் அடங்கிடுவாள்..
இன்று இரவேனோ
எங்கள் இருவருக்கும்
நீல வண்ண
சிறு படுக்கை..
சுவரோரம் அவளை
அமரச் செய்து..
ஜன்னல் ஓரமென்றும்
நான் சொல்லலாம்..
சிறிய தலையணை
எனக்கு மட்டும்..
சிறிய போர்வையும்
எனக்கு மட்டும்..
ஆணாதிக்கமென்று கூட
நினைக்க தோன்றும்.
--------------------
காக்கைக்கு தன் குஞ்சு
பொன் குஞ்சு என்பர்..
அக்குஞ்சிற்கும் தன் தாய்
என்றும் தங்க தாயன்றோ..
அம்மா என்று அழைத்தாலே
அன்பான சொல்லன்றோ..
அவனுக்கோ.. அவளுக்கோ..
அம்மா என்றும் அழகியன்றோ..
அழகு இல்லா அம்மாக்கள்
இவ்வுலகில் இல்லையன்றோ..
-----------
சாம்.சரவணன்.
கவிதை போட்டிக்காக எழுதியது..---------------------------------------------------கவிதைகளில் கலைச்சொற்கள்---------------------------------------------கீழ்க்கண்ட இலக்கிய சொற்கள் கவிதையில் இடம் பெற வேண்டும்._-------------- ------1. *கவ்வை* - பழிச்சொல்2. *காழகம்* - ஆடை 3. *குரம்பை* - குடிசை 4. *சகடம்* - வண்டி5. *சிற்றில்* -விளையாட்டு வீடு6. *ஓர்வு* - சிந்தனை 7. *கங்குல்* - இரவு8. *அசும்பு* - சகதி9. *அத்தம்* - வழி, காட்டுவழி, பாலைவழி10. *அயில்* - உண், பருகு, குடி11. *அல்கல்* - நாள்தோறும்12. *உறவி* - எறும்பு-------------------------------------விதவையின் ஒரு நாள்------------------------------கணவனை இழந்
----------------------------------
உறவுகளுடன் உறவாட
காலை உணவில் சேர்ந்த
உற்ற உறவுகள் இன்று ..
வந்த உறவுகள் கலைய
மதிய உணவு தீர
மணமக்கள் மாலை துவள
அவ்விருவர் களைத்திருக்க..
வந்தும் வராமல்
பட்டும் படாமல்
பார்த்தும் பாராமல்
யார் கை தொடாமல்
அன்பளிப்பு அளித்து
பந்தி பக்கம் போகாமல்
முகக்கவசம் மறையாமல்
கிருமி நாசினி கை நனைய
முந்தி புறம் ஓடும்
முறை என்னவோ
இக்கால முறையாகி
போனதோ?
-----------
சாம்.சரவணன்