அம்மா அழகி
--------------------
காக்கைக்கு தன் குஞ்சு
பொன் குஞ்சு என்பர்..
அக்குஞ்சிற்கும் தன் தாய்
என்றும் தங்க தாயன்றோ..
அம்மா என்று அழைத்தாலே
அன்பான சொல்லன்றோ..
அவனுக்கோ.. அவளுக்கோ..
அம்மா என்றும் அழகியன்றோ..
அழகு இல்லா அம்மாக்கள்
இவ்வுலகில் இல்லையன்றோ..
-----------
சாம்.சரவணன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
