காதல்
காதல்
கரைகாணாத மகிழ்வுக்கு
மனதை ஆட்படுத்தும்
மந்திரச் சொல்....
அகிலமே அளவில்லாத
மகிழ்ச்சியில் ஆனந்த
நடனம் புரியும்......
அழகற்றவையும் உலக
அழகியென மதுவுண்டு
அழையும் மனது.....
தேரடி வீதியினில்
தேற்றுவாரின்றி அழுவதிலும்
சுகம்காணும் மனம்.....
ஒற்றை பார்வை
தரிசனம் கிடைத்தால்
செருக்கேறும் மனம்....
தேங்கிய குட்டையாக
தெருவோரம் நின்றே
பாழாகும் வாழ்வு....
பெற்றோரின் பதைப்பும்,
நிகரற்ற பெரும்
பாசாங்காக தோன்றும்.....
இந்நோய் தொற்றுக்கு
தடுப்பு ஏதுமில்லாது
அழியும் சுவர்கள்....
சுவர்கள் இல்லாமல்
சித்திரம் வரைவது
எப்படி சாத்தியம்.....
கவிபாரதீ ✍️