உயிர் கவிதை

உறங்கும் உனைநான்
விழிமலர காதலுடன்
பார்க்கும் நொடிகள்
கவிதை....

உறக்கம் துறந்து
புன்னகை மிளிர
விழிக்கும்நீ எந்தன்
உயிர்க் கவிதை....

மயக்கும் மென்னகை
முனுமுனுக்கும் பாடல்
நடக்கும் மென்நடை
நம்வீட்டில்நீ கவிதை....

எந்தன் நெஞ்சில்
நீக்கமற நிறைந்த
நிலா பெண்ணே
நீயென் கவிதை....


கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (29-Aug-23, 10:07 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : uyir kavithai
பார்வை : 714

மேலே