மேகலை - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மேகலை |
இடம் | : ஸ்ரீவில்லிபுத்தூர் |
பிறந்த தேதி | : 05-Dec-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2011 |
பார்த்தவர்கள் | : 887 |
புள்ளி | : 204 |
நடை பழகலாம்.....
இயற்பெயர் :மா.சதிஷ்குமார்
தொடர்புக்கு
9865815903
நீயும் நானும் ஒன்றாக
சேர்ந்தால் புது உலகம் உருவாகும்
அங்கு நாமே முழுதாவோம்
கண்ணோடு கண்ணும் நெஞ்சோடு
நெஞ்சும் மோதி பார்ப்போம்
அந்த வலியை அனுபவிப்போம்
பேச்சுகள் வேண்டாம் பொறுமையும்
வேண்டாம் இருளான இரவில்
நம்மை தேடி தொலைந்துபோவோம்
ஏற்றம் பெரிதா இறக்கம் சரியா
தர்க்கம் செய்வோம் தாழம்பூ மணமாய்
அறை முழுவதும் வியாபித்திடுவோம்
உயிராய் தனித்து மெய்யாய்
இணைவோம் உயிர்மெய்க்கு
காவலாய் ஆயுதம் தாங்கிடுவோம்
துடிப்பாய் தொடர்ந்து துடிப்பில்
முடிப்போம் பெருமூச்சில் வேர்விடும்
பூக்களாய் கிளையில் பூத்திடுவோம்!!
மழைக்கால ராத்திரியில் அவள்
மார்புச் சூட்டில் இடம் பிடிக்க
முந்துவதேன் நட்சத்திரங்களே
அவள் சூட்டில் உருகிப்போவதில்
காதல்நோய் தீருமென்றால்
என்னையும் கூட்டிச் செல்லுங்களேன்
கட்டில் இல்லை மெத்தை இல்லை
கம்பளியும் இல்லை ஒளியும் இல்லாத
இருளில் அவள் அணைப்பில்
அடங்கும் ரகசியம் பகிருங்களேன்
ஓயாத மழையில் தீராத வாசனை
இருந்தும் வியர்வை துளிகளாய்
அவள் தேகத்தில் நீங்கள் எப்படி
உளறாமல் பதில் சொல்லுங்களேன்
பசியும் இல்லை பாலும் இல்லை
சுவைத்தால்தான் உண்மை புரியும்
ஆனாலும் அவளை எனக்கு
விட்டுக் கொடுக்க மனமில்லாத
காரணத்தை சொல்லுங்களேன்...
கதை முழுவதும்
விரவிக் கிடக்கும் காதலை
இப்போது நான் தாங்கிக்கொண்டு
இருக்கிறேன் என்பதே பெருமகிழ்ச்சி
கதையில் காதல் வசனங்கள்
வெகு இயல்பாக எழுதப்பட்டிருப்பது
என்னை வெகுவாக ஈர்த்திட
நானும் ஆனேன் கதை நாயகியாய்
ஒன்றிரண்டு கூடவோ குறையவோ
செய்யலாம் கதையில் காதலர்கள்
பகிர்ந்து கொண்ட முத்தங்கள்
அது என் வாசிப்பின் ரசனையே
கற்பனை கதை என்றாலும்
என்னுடைய வாழ்வை ஒத்திருப்பதால்
மனது எப்போதும் கதாநாயகி
அர்ச்சனாவாக காற்றில் மிதக்கிறது
கதையின் முடிவு எப்படி இருந்தாலும்
அதை நான் படிக்கப் போவதில்லை
இதுவரை படித்த மயக்கத்திலே
வாழ்வை ரசனையாக வாழுவேன்...
யாக்கை கூடு பலவித கற்பிதம்
மையச் சிறப்பே சொர்க்கவாசம்
சிவமே மூழ்கி திளைக்க
சில்வண்டு ரீங்காரம் பெரும்தவமே
அங்கயற்கண்ணி தடாதகை
மீனாட்சி பரிபாலன பள்ளியறை
நாடும் நாயக சிவமே
நற்கதி அடையும் பெரும்செயலே
ஆலவாய் முதற்றமிழ் தலைவன்
முத்தாடும் முன்னெடுப்பு
வான்நோக்கு செலுத்தும் அதிகாரம்
சிவமே ஆவுடையார் பிரதிபலிப்பு
களமாடும் கார்த்திகை நாயகன்
கட்டித்தழுவி எடுத்தியம்பும்
இல்லறமும் சிவமே முதற்பணி
அச்சிலேறும் அலங்கார பார்வதி
உணர்ந்தார் மெச்சும் சிவமே
உயிர்விதைக்கும் உயர்உழவு
பெருந்திரள் தோள்இயக்க
உதிரப்பூ உயிர்ப்பூ தனவானாம்!
உன் பார்வையில்
நானே துளிதேனாய் ஆனேன்
உன் நாவினால்
நீ என்னை தீண்டினால்
என் உயிர் உருகுமே ஆவலாய்
மழை சாரலின் ஊடே
பறந்திடும் கார் தும்பி போலவே
உணர்வுக்குள் இழையோடும்
காதலும் கள் போதை
ஏற்றியே தள்ளாடுமே ஆவலாய்
இரு இதயங்களை படித்த
பக்கங்களாய் கலைத்துபோட
துடிக்கின்றதே காற்றும்
ஆடை அணிந்தும் பயனிலையே
அதிகாரமும் மண்டியிடுமே இயற்கையாய்
இருநிலவுகளை சுமக்கவே
கடிவாளம் போடும் காதலை
நாம் கூடி வீழ்த்தி சிலையான பின்னும்
வழியுதே காமமும் வியர்வையாய்
அதிகாலையும் தொடருமே ஆவலாய்
மழை காலத்தின் சுவடுகள்
மறையும் முன்னே எதிர்கால
பனியாய் நடுநிசியில் நாமும்
உறைவோம் இணைவோம்
சுட்டு விரலாலே கட்டி இழு
உன் பார்வையில்
நானே துளிதேனாய் ஆனேன்
உன் நாவினால்
நீ என்னை தீண்டினால்
என் உயிர் உருகுமே ஆவலாய்
மழை சாரலின் ஊடே
பறந்திடும் கார் தும்பி போலவே
உணர்வுக்குள் இழையோடும்
காதலும் கள் போதை
ஏற்றியே தள்ளாடுமே ஆவலாய்
இரு இதயங்களை படித்த
பக்கங்களாய் கலைத்துபோட
துடிக்கின்றதே காற்றும்
ஆடை அணிந்தும் பயனிலையே
அதிகாரமும் மண்டியிடுமே இயற்கையாய்
இருநிலவுகளை சுமக்கவே
கடிவாளம் போடும் காதலை
நாம் கூடி வீழ்த்தி சிலையான பின்னும்
வழியுதே காமமும் வியர்வையாய்
அதிகாலையும் தொடருமே ஆவலாய்
மழை காலத்தின் சுவடுகள்
மறையும் முன்னே எதிர்கால
பனியாய் நடுநிசியில் நாமும்
உறைவோம் இணைவோம்
சுட்டு விரலாலே கட்டி இழு
கனவுகளுக்குள் இறங்கி
தூர் வார தொடங்கினேன்
மீண்டும் பெய்யத்தொடங்கியது
பெருமழை
அவள் நினைவுகளாய்
என்னை சூழ்ந்தபடி
குறை சொல்லாமல்
இரவுகளை கடந்திட
பழக்கியவள் அவள் தான்
அப்படியே தாலாட்டில்
தாய்மடியென தன் நெஞ்சில்
என்னை அவள் புதைத்ததும்
அறிய மழைநாள் தான்
முழுதாய் ஒரு முத்தத்தை
நீலசோறெனவே ஊட்டியவள்
வேம்பு நிழலாய் வீழ்ந்து கிடந்தாலும்
பூமியையும் என்னையும் குளிர்ச்சியாய்
வாரி அணைக்கும் பெருந்தகையாள்
தினவெடுத்த நேரங்களில்
எல்லாம் வேள்வித்தீயாய் சூழ்ந்து
வியர்வை மழையாய்
பொழிய தவறாதவள்
ஒரு பொய் சொல்லிக்கொள்கிறேன்
என கெஞ்சும் போதும் கொஞ்சும் போதும்
போதுமென்று சொல்லும் வரை
மனதை குழையவ
ஒரு முத்தம் கொடுக்க
இவ்வளவு வெட்கமா என
சிரித்தாள் வெண்ணிலா
நான் வேண்டுமானால்
கண்களை மூடிக்கொள்ளவா
என்றாள் மின்மினி
சுற்றி வேறுயாரவது பார்க்கலாம்
என்ற சந்தேகத்தில் பார்வையை
செலுத்தினேன் அல்லியின் மீதும்
அடக்கத்தை என்ன விலையென்று
கேட்கும் அழகியாயிற்றே அவள்
அப்படியே மணத்தால் என்னை
திருட முயற்சிக்கையில்தான்
தெரிந்து கொண்டேன் மல்லிகையும்
அருகில்தான் ஒளிந்திருக்கிறாள் என்று
எல்லோரும் என்னையே உற்றுப்பார்த்தபடி
இருக்க எனக்கு மட்டும் ஏன்
கூடிக்கொண்டே இருக்கிறது வெட்கம்
என்ற சுயசோதனையில் இருந்து
மெதுவாய் வெளிவந்து தப்பிக்கையில்தான்
என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டத
ஒவ்வொரு வார்த்தைக்கும்
இடையில் இடைவெளி விட்டு நீ
பேசிக்கொண்டிரு முத்தங்களால் நான்
நிரப்பிக்கொள்கிறேன்!.....(காதலை)
நண்பர்கள் (15)

கவி கண்மணி
கட்டுமாவடி

சீர்காழி சபாபதி
சென்னை

ஷிபாதௌபீஃக்
பொள்ளாச்சி

கல்லறை செல்வன்
சிதம்பரம்
