ராதையின் ஊடலுக்கும்

ராதே:

இமைகளை
தழுவிடும் காற்றே
என் தனிமையை
திருடிச் செல்வாயா?

இதயம்
நுழைந்த காற்றே
என் வலிகளை
திருடிச் செல்வாயா?

கோடைகால
காற்றே என்னை
கோபுரத்தின் உச்சிக்கு
அழைத்துச் செல்வாயா?

தலைகோதும்
இளமைக் காற்றே
குழந்தையாய்
வாரி அணைப்பாயா?

முத்தமிடும்
மோகன காற்றே
மென் சிணுங்கல்கள்
என்னிடம் மட்டும் ஏனோ?

கண்களுக்கு
அகப்படாத காற்றே
என் மஞ்சத்தில்
உனக்கென்ன வேலை?

(காற்று = கிருஷ்ணா)💞💕

எழுதியவர் : மேகலை (30-Aug-21, 12:18 am)
சேர்த்தது : மேகலை
பார்வை : 129

மேலே