பருவமழை தீரா

பருவமழை
பொழிகிறது
பருவமெல்லாம்
நனைகிறது

பாய் விரிக்க
இடமில்லை
உன்மடியே
பஞ்சுமெத்தை

பகல் இரவாக
நீள்கிறது
இரவு உறவாக
தொடர்கிறது

என் அட்சய
பாத்திரம்
நிறைகிறது
மழையில் உன்
சூத்திரமும்
புரிகிறது

உன்னை கேள்வி
கேட்டால் பதில்
"ம்ம் தானா"
அதிலும்
மழையின் ஈரம்
பிசுபிசுக்கிறது...!

எழுதியவர் : மேகலை (1-Nov-21, 10:01 am)
சேர்த்தது : மேகலை
பார்வை : 193

மேலே