எழிலாற்றுப்படை
இட்டடையிற் கடைந்தெடுத்து
இடமறிந்து பதம் பிரித்துப்
பக்குவமாய் ஒவ்வொன்றும்
பாங்குடனே வகுத்துத்
தேனமுதும் பால்நிலவும்
சேர்த்துக் குழைத்தெடுத்துச்
சந்தங்கள் மாறாத
கவிதைச் சரம்போல
அந்தந்த இடமறிந்து
அத்தனையுந் தொகுத்து
எங்கெங்கோ சேர்த்தெடுத்த
முத்துக்கள் அத்தனையும்
அங்கங்கே அழகாக
உருவில் இழை பதித்துச்
சிற்பியவன் செதுக்கி வைத்த
பொற்சிலையோ! பேரெழிலோ!
பாவையவள் தான் நிலவோ!
தெள்ளமுதோ! தெவிட்டாத
தித்திக்கும் செங்கரும்போ!
மரகதமோ! மாணிக்க மணிவிளக்கோ!
கதிரவனின் ஒளிப்பிழம்போ!
கண்சிமிடடும் தாரகையோ! காரிகையோ!
பேரெழிலோ! நானறியேன்...
அள்ளிவைத்த கூந்தலிலே அல்லிமலர் சூடிக்
கிள்ளிவைத்த மொட்டெடுத்து காலில் சரந்தொடுத்து
அன்ன நடைபயில அடியெடுத்து வைக்கையிலே
முல்லை மரத்தடியில் முளைவிட்ட முள்ளொன்று
தொல்லைதர நினைத்துத் தைத்ததுவோ பாதமதில்...