அழைக்கிறேன்
அழைக்கிறேன்...
04 / 04 / 2025
கையிலும் பையிலும் காசு இல்லாதவரை
தானமும் தர்மமும் தாராளமாய் செய்யவரும்
கையிலும் பையிலும் காசு சேர்ந்துவிட்டால்
மானமும் மரியாதையும் இல்லாமல் போகும்.
காசு இல்லாதவரை ஏழை பாழை
மனிதநேயம் என்று பேசும்
காசு சேர்ந்துவிட்டாலோ
கால்மேல் கால்போட்டு
கவுரதையை காட்டும்.
காசுதான் இங்கு கர்ப்பகிரகத்தில்
இருக்கிறது
படைக்கிறது..
காக்கிறது..
அழிக்கிறது..
காசே உன்னை வணங்குகிறேன்
உன்னைத் தேடித்தான் அலைகிறேன்
என்வாழ்வில் நிறைந்திட அழைக்கிறேன்.