அவளாற்றுப்படை

சொற்களால் நெய்யப்பட்ட கவியாவும் அவளன்றோ - அவள்
கற்களால் பொறிக்கப்பட்ட கவின்மிகுச் சிலையன்றோ!,
பொற்கலன் பொதிந்துயிலும் பூமகள் அவளன்றோ!, அவள்
கற்காலக் குமரியவள் அணங்கினியின் மரபன்றோ...!

மயில்ப் பீலிதனை மங்கையவள் சூடினாளோ - கார்
மயிர்க் கற்றைகள் யாவுமவள் கூந்தலாக!,
உயிர்த்த மின்னலொளி பாய்ந்தது போலன்றோ - அவள்
துயில்வித்த காலனவன் எழுந்தாடும் நேரமிதில்...!

இடிமுழக்கக் குரலாலே எஞ்சியுள்ள காதலெல்லாம் - எமைக்
கடிந்துகொண்டு கதைவடைக்க கடனேதும் பெற்றனவோ!,
மடிதாங்கும் அவளாலே மறுதலிக்க மனமில்லை - அவள்
கொடியிடை கொய்திட்ட கொற்றவனே நானானதால்... !

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (1-Nov-21, 6:51 pm)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 50

மேலே