காதல் தேன்மதி தேன்நதி

என்னால் எப்படி
சாத்தியமாகிறது
உன் அன்பின்
பெருவெளியில்

குடையில்லாமல்
நனைவதற்கும்
வெயிலில்லாமல்
காய்வதற்கும்

உன் மென்மையான
தீண்டலில் நான்
முகிழ்ந்திருப்பதும்
அதிசயம் தான்

எடுப்பான
என் மலர்களின்
தர்க்கமும் என்னை
ஏதோ செய்கிறது

இன்னும் இன்னும்
இறுக்கமான
அணைப்பின் ஆழமும்

துடிப்பில் மலர்ந்திடும்
வேகமும் கரைமீறிடும்
நதிபோல் வேகமெடுக்க

துள்ளிய நான் துயில்
கொள்ள பஞ்சணை
வேண்டாமே உன்
நெஞ்சணை போதுமே
இக்கணத்தில்...

எழுதியவர் : மேகலை (30-Aug-21, 10:41 pm)
பார்வை : 120

மேலே