மணிவாசன் வாசன் - சுயவிவரம்

(Profile)பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  மணிவாசன் வாசன்
இடம்:  யாழ்ப்பாணம் - இலங்கை
பிறந்த தேதி :  24-Jul-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Nov-2014
பார்த்தவர்கள்:  2272
புள்ளி:  518

என்னைப் பற்றி...

என்னை வெறுக்கும் யாரையும் நான் வெறுக்க எனக்கு நேரம் இல்லை.
ஏனெனில்
என்னை விரும்புபவர்களை நேசிக்க மட்டுமே எனக்கு நேரம் இருக்கு….. நான் ரொம்ப பிஸியாக்கும்

என் படைப்புகள்
மணிவாசன் வாசன் செய்திகள்
சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-May-2016 1:39 am

மென்பொருள் கனவில் 48

எல்லோரையும் சமமாக பாவிப்பாள்
முல்லைச்சரம் போல பற்கள்
அவளை அழகாக படைத்த பிரம்மன் தவறா?
அதை கால காலத்திற்கு திருமணமாகாமல்
தள்ளிப்போட்டு அழகு பணம் மட்டும் போதும் என
முடிவெடுத்தது அவளா?
இல்லை வாலிப காலத்தில் ஏமாந்தாளா ?
இல்லை திருமணம் ஆகி விவாகரத்தானவளா?
இல்லை இளம் விதவையா?
எதுவும் தெரியாது
அவள் ஒரு புரியாத புதிர்
எல்லோரும் சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைப்பாள்
அவளும் சிரிப்பாள்
சற்று நிறத்தில் அவள் எங்கோ பார்ப்பாள்
ஒரு சோகமயமாக
ஒரு ஏக்கத்துடன்
இருப்பாள்

மேலும்

உங்கள் வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நரி தோழி 24-May-2016 6:51 pm
உணர்வுபூர்வமான வரிகள் . 24-May-2016 4:51 pm
இந்த சோகக் கதை பெரிய பொறுப்பில் நிறைய சம்பாதிக்கும் பெண்களிடம் இந்தக் காலத்தில் நிறைய உண்டு தோழா . உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .. என்னக்கு தெரிந்தால் இங்கயே சொல்லி இருக்க மாட்டேனா தோழரே ? 24-May-2016 9:08 am
அப்போ ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது அதனையும் நகர்வில் நீங்களே சொல்லிடுங்கள் 24-May-2016 6:55 am
சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-May-2016 1:49 am

மென்பொருள் கனவில் 49

இப்படித்தான் அவள் மேல் அன்பும் பாசமும் அதிகம் ஆனது
காலம் களம் கண்டது
மௌனம் மொழி பேசியது
ஊமை வார்த்தை பேசியது
குருட்டு வாழ்க்கை வாழ்ந்தது
இளமை பொய்த்தது
அவளுக்கும் வெட்கம் வந்தது
வெட்கம் வரச் செய்தவன் யாரோ ?
சினிமாக் கதைப்படி
அவன் தானே காதலன்
அவனேதான் மாப்பிள்ளை
நானும் அப்படித்தான் நினைத்தேன்
புதிதாக வெட்கம் கொண்டாள்

மேலும்

நாணம் பெண்ணின் அம்பு .. உங்கள் கருத்திற்கு நன்றி தோழா 24-May-2016 9:09 am
வெட்கம் பெண்மையின் அழகான முகவரி ஒவ்வொரு நிலையிலும் வெட்கம் கொண்ட பின் தான் அவளும் புதுமையாக தெரிகிறாள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-May-2016 6:56 am
மணிவாசன் வாசன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2016 1:57 am

மென்பொருள் கனவில் - 50

அவனை ஏன் திருமணம் செய்யவில்லை எனத் தெரியவில்லை
என் மனதுக்குப் புரியவில்லை
எல்லோரோடும் வெளியில் செல்வாள்
நண்பர்களோடு படம், பூங்கா எனச் செல்லும் பழக்கம் உண்டு
ஆனாலும் அவனை மட்டும் ஒதுக்கி வைத்தாள்
சில நாட்காளாக யாருடனும் ஒழுங்காக பேசுவதில்லை
ஆனால் யாருக்கும் தெரியவில்லை
புரியவும் இல்லை
அவோனோடு இவள் காதல் கொண்டாள் என என்
மனது சொல்கிறது
அமைதியானாள்
காணாமல் போனாள்
தீடிரென்று
வேலையை விட்டு நின்றாள்
திருமணம் என்றாள்..
யாருடனோ எவருடனோ
ஒரு அழகான காற்று எங்களைக் கடந்து போயிற்று ..
நினைவுகள் நீங்காமல் .......

மேலும்

வாய்ப்பு கிடைத்தால் தட்டிப்பறித்துக் கொள்ள பெண்கள் தவறுவதில்லை 31-Jul-2016 7:51 pm
தங்கள் வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே... ஆமா பாஸ் சரியாய் சொன்னீங்க 06-Jun-2016 10:14 pm
காணாமல் போனாள் தீடிரென்று வேலையை விட்டு நின்றாள் திருமணம் என்றாள்.. ----------------------------------------------------- இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் நல்லா சொன்னீங்க தம்பி .. 06-Jun-2016 9:10 pm
தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே 30-May-2016 10:25 am
மணிவாசன் வாசன் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-May-2016 8:07 pm

காதலால் கண்ணீர் ....
வருகின்றது எனில் ...
காதல் தூசு போல் ....
மாறிவிட்டதோ ....?

உன்னை நினைத்து ...
அழுவது என்ன என் ....
கடமையா ....?
உன்னை நினைக்கும் ....
போது கண்ணீர் வர ...
வைத்தவள் -நீ

+
கண்ணீர் கவிதை
இதயம் வலிக்கும் கவிதை
கவிப்புயல் இனியவன்

மேலும்

கண்ணீர் என்பது மட்டும் தான் அவளால் அளிக்கப்படும் நிரந்த கொடை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-May-2016 6:23 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Bharath selvaraj மற்றும் 15 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Mar-2016 7:48 am

மன்னித்து விடுங்கள் சொந்தங்களே இருவரி கவிதைகள் அனைத்தும் ஹைக்கூ என நம்பும் முட்டாள்களில் இவளும் ஒருத்தி...இன்றும் ஏதோ கிறுக்கி விட்டேன் பிழைகளை மன்னிக்க வேண்டுகின்றேன். !


உயிரிழந்த பட்டாம்பூச்சி
இலையுதிர்ந்த விருட்சம்
ஜன்னலில் பறக்கும் சீலை.(1)

பால் கிண்ணத்தில்
கயல் விளையாடுகிறது
நதியில் நிலா(2)

உதிரம் தோய்ந்த வானம்
கோப அலைகளோடு ஈழத்தில் மண்டைஓடுகள்(3)

புரட்சி சிந்துகிறது
எழுத்தாளனின் வற்றிய
பேனா(4)

மலட்டு மேகம்
கட்டறுத்து ஓடும் காட்டாறு
விவசாயியின் கண்ணீர்
(5)
ஜாதிக் கொலை
நிகழ்த்திய அமைச்சர்
மேடைப்பேச்சு ஒன்றே எங்கள் ஜாதி(6)

நிசப்த இரவில்
நிகழும் சுகப்பி

மேலும்

சிறப்பான ஹைக்கூ அனைத்தும் புரட்சி சிந்துகிறது எழுத்தாளனின் வற்றிய பேனா உண்மையான வரிகள்...... 31-Mar-2016 4:04 am
ஹைக்கூ வரிகள் அனைத்தும் அருமை ! 29-Mar-2016 3:45 pm
அருமையான வரிகளுடன் படைப்பு 28-Mar-2016 8:51 pm
அனைத்தும் மிக அருமை..! வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 11:56 pm
கட்டாரி அளித்த படைப்பில் (public) Arulmathi மற்றும் 26 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Feb-2016 4:53 am

செழித்துப்படர்ந்திருந்தன
மைதானங்கள்...
பசியோடு ஓடிக்கொண்டிருக்கின்றன...
பந்தயக்குதிரைகள்.

எல்லா அடர்வனங்களிலும்
வழிதவறாது
பயணித்து விடுகிறது
ஒற்றையடிப் பாதை...

காதல் வாய்க்கப்பெறாதவர்களின்
நிலவறை அலமாரிகளுள்
இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு
கைக்குட்டை...!

கொன்றது மழை...
எப்படியும் பிழைத்திடுவோம்..
மிகச் சமீபமாகத் தேர்தல்...

நக்கீரனும் பாண்டியனும்
அறியாதே போயிருந்ததை
ஈசனுக்காவது தெரிவிக்கவேண்டும்...
மண்வாசனை..

அண்ணன் மகளைத்
தலைகோதி.. அக்காள் மகளிடம்
மீசை முறுக்கிவிடுகிறது...
பெண்ணியம்...

அடிமைகள்
ஆராதிக்கப் படுகிறார்கள்...
இன்னுமொரு இறகு
உதிர்த்துப் பறக்க

மேலும்

அனைத்தும் மிக அருமை...! காதல் வாய்க்கப்பெறாதவர்களின் நிலவறை அலமாரிகளுள் இற்றுப் போகாமலிருக்கிறது ஒரு கைக்குட்டை...! - அருமை 20-Mar-2016 12:19 pm
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி....!! 09-Mar-2016 5:27 pm
ஹைக்கூ தாெடர் கவிதை பாராட்டுக்கள் நன்றி 09-Mar-2016 2:47 am
வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி. 25-Feb-2016 6:58 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 28 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Feb-2016 1:10 am

1.***************************************
கண்ணாடியில் முகம் பார்க்கிறேன்
தெளிவாக தெரியவில்லை
என் முகமூடி

2.***************************************
பெரியாரின் கல்லறையைச் சுற்றி
பூத்துக் கொண்டிருக்கிறது
ஜாதி மல்லி

3.***************************************
அழுகிறது குழந்தை
அம்மா என்று கத்துகிறது
தொழுவத்தில் பசு

4.***************************************
தேன்குடிக்கும் வண்டுகள்
மகரந்தச் சேர்க்கையில் மரணிக்கிறது
பூக்களில் மீத்தேன்

5.***************************************
உயர்சாதி மனிதனுக்குள்
ஓடிக் கொண்டிருக்கிறது
ஒடுக்கப் பட்டவனின் ரத்தம்

6.*************************

மேலும்

தங்கள் பிறந்ததின நன்னாளில் கவிதை இலக்கியம் பல படைக்க வேண்டுகிறேன் கவிதை நயம் அருமையான எழுத்தாளுமை திறன் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் தமிழ் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 30-Aug-2016 5:54 am
மிக்க நன்றி நண்பரே... வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் பல... 28-Mar-2016 11:20 pm
ஹைக்கூ வரிகளில் தெளிவாகத் தெரிகிறது ... உங்களின் கவிதை மனமும், வார்த்தைகளை அழகாக கையாளும் திறமையும். இது போன்ற வரிகளை அனுபவித்து ரசிப்பதற்கு இத்தனைக் காலம் ஆயிற்று. 28-Mar-2016 11:02 pm
மிக்க நன்றி தோழமையே... தங்கள் ரசனையில் மகிழ்ச்சி... தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் பல... வளர்வோம் வளர்ப்போம்... 22-Mar-2016 10:42 pm
கவிஜி அளித்த படைப்பில் (public) சரவணா மற்றும் 26 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2016 7:53 am

மொழி பெயர்த்த பின்னும்
முத்தமாகவே இருக்கிறது
முத்தம்
---------------------------------------------------------

நிழல் துளைத்த
வளைவுகளில்
நெளிகிறது உடல்
--------------------------------------------------------

அவசரத்தில் அப்பா சட்டையை
அணிந்து வந்தேன் -அப்போதும்
பத்து ரூபாய் பாக்கெட்டில்
--------------------------------------------------------

ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி
விட முடிகிறது
வீட்டுப் பெண்களால்
--------------------------------------------------------

மிதந்து செல்லும்
நதி முழுக்க
நீச்சல் கைகள்
----------------------------------------------------

மேலும்

நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
நன்றி தோழர்... 21-Mar-2016 10:22 pm
அனைத்தும் அருமை...! ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி விட முடிகிறது வீட்டுப் பெண்களால் - மிக அருமை முன்னால் தூக்கிப் போட்டாய் சற்று நீளமான ஹைக்கூ ஜடையானது - அழகு வாழ்த்துக்கள் 20-Mar-2016 11:18 am
மணிவாசன் வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2016 1:14 pm

காதலுடன்
காத்திருக்கிறேன்
என் சுவாசத்தில்
உன் வாசம்

மேலும்

மணிவாசன் வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2015 10:10 am

கவியின் இனிமையால்
தமிழுக்கு மகளானாள்
அளவில்லா அன்பினால்
எனக்குத் தாயானாள்...

தேன்மதுரக் குரல்லென
இனித்திடும் இவள் குரலின்
கொஞ்சிடும் மகுடிக்கு
மயங்கிடும் பாம்பானேன்...

பேசிடும் பொழுதினில்
கடந்திடும் மணித்துளியை
கட்டிப் போட்டிட
வரம் கேட்டேன்...

சாமிக்கும் அவள் குரல்
மந்திரம் ஆனதால்
கல்லுக்கும் உயிர்கிடைத்து
வரத்தினை மறு(ற)க்கின்றார்...

மேலும்

மணிவாசன் வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2015 10:54 am

நீண்ட நாட்களின் பின்னர் வீடு திரும்பின கஜனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. தனது வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. பலவித கேள்விக்குறிகளுடன் அங்கும் இங்கும் பார்த்தவனாய் வீட்டினுள் நுழைந்தான்.

"மாப்பிள்ளை வந்திட்டார்..." உறவினர் ஒருவர் கூறவும் அவரை ஏளனத்துடன் பார்த்துவிட்டு தாயை தேடினான்.

"அம்மா... என்ன நடக்குது இங்க... எதுவுமே எனக்கு புரியல..."

"அட... வந்திட்டியாடா... முதல்ல உடுப்பை மாத்திட்டு கை, கால், முகம் கழுவிட்டு வா ஆறுதலாக கதைக்கலாம்." - தாய் மனோன்மணி

"முதல்ல நான் கேட்டதுக்கு பதிலா சொல்லுங்க..."

"ம்... இன்னும் ஒரு வாரத்தில உனக்கு கல்யாணம். அதான் இப்பவே ரெடி ஆகிட்டு இருக்கோம்

மேலும்

அட செமைய இருக்கே . 09-Nov-2015 10:31 am
மணிவாசன் வாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2015 7:37 am

இயந்திரம் என இயங்கிய
மனித ஜடத்திற்கு
மனிதத்தை விதைத்து
வாழ்க்கையை சொல்லி
வாழக் கற்றுக் கொடுத்தவள்
நீயடி...!

பிடிமானமின்றி வழியறியா
நடை பயின்றவனை
நெறிப்படுத்தி
வாழ்க்கை அழகென
உலகைக் காட்டிய
இரண்டாம் தாயவள் நீயடி...!

அவ்வப்போது நான் உளறிடும்
சின்ன சின்ன ஆசைகளையெல்லாம்
தந்து ஆச்சரியப்படுத்திடும்
அதிசய உறவு நீயடி...!

அன்புக்கு ஏங்கி
பாசத்துக்காய் தவிச்சவனுக்கு
எல்லையில்லா அன்பு காட்டி
என்னை கட்டியாளும்
அன்பு இராட்சசி நீயடி...!

வாழ்க்கை முழுதும்
உன் அன்பின் அரவணைப்பில்
வாழ்ந்திட வேண்டும்
இறந்திடும் தருணத்தில்
உன் மடியில்......
உன் முகம் பார்த்து.....
என் உயிர் ப

மேலும்

அட அட அட யாருங்க அது .? Kavithaa kavithaa 14-Sep-2015 6:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (475)

சஞ்சீவ் நா

சஞ்சீவ் நா

முன்சிறை, கன்னியாகுமரி
தமிழ் உதயா

தமிழ் உதயா

லண்டன்
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (475)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
JAHAN POTTUVIL

JAHAN POTTUVIL

SRI LANKA - POTTUVIL

இவரை பின்தொடர்பவர்கள் (475)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே