சகாய டர்சியூஸ் பீ - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சகாய டர்சியூஸ் பீ
இடம்:  கன்னியாகுமரி, தமிழ்நாடு
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Sep-2019
பார்த்தவர்கள்:  24
புள்ளி:  5

என்னைப் பற்றி...

எனது பெயர் சகாய டர்சியூஸ், கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள இராஜாக்கமங்கலம் துறை என்கிற அழகிய கடற்கரை கிராமம் எனது ஊர்.
படித்தது முதுகலை கணினி செயல்பட்டியல்.தற்போது தென் கொரியாவில் கணினித்துறையில் பணியாற்றிவருகிறேன். தமிழ்மீது கொண்ட காதல் காரணமாக சில நேரங்களில் எண்ணங்களை கிறுக்குவது உண்டு.

என் படைப்புகள்
சகாய டர்சியூஸ் பீ செய்திகள்
சகாய டர்சியூஸ் பீ - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2019 2:31 am

துடிக்கும் உன் விழிமச்சங்கண்டு
கார்மகள் இடியாய் ஒப்பாரியிட!
நெஞ்சங்கலங்கிய முகில்களும்
மின்னலாய் மிரட்டலிட!
காரிருளும் சூழ்ந்தது வானுலகை…
இனியும் தாமதித்தால் ஆபத்து
பயந்த வருணனும்!
பாய்ந்தோடி வந்தான் புவிமீது
சாரலாய் உனைக்காக்க…!

மேலும்

சகாய டர்சியூஸ் பீ - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Sep-2019 3:31 am

தமிழரிடம் தமிழ்பேச
தயங்கும் தமிழ்நாட்டு
தமிழனே…

விழிகளை விடுத்து
ஓவியம் வாங்கி
என்ன செய்யப்போகிறாய்..?

சிந்திக்கும் ஆற்றலை விடுத்து
வெறும் பேச்சாற்றலால்
என்ன சாதிக்கப்போகிறாய்..?

பெற்ற தாயை பிரிந்தால்
அனாதையாய் திரிவாய் என்பதினை
என்று நீ உணரப்போகிறாய்?

பகலவனை இருளில் அடைத்து
விட்டில் வெளிச்சத்தில் வாழ
ஆசைப்படும் தமிழனே..!

வரலாறுகள் செறிந்த…
இலக்கியங்கள் நிறைந்த…
தனித்தன்மை பொருந்திய…
படிக்க பழக இனிமையான மொழி
செம் மொழிகளில் மூத்த மொழி
உந்தன் தாய்மொழிதான் என்பதினை
ஒருமுறையேனும் உணர்ந்திடு தமிழா..

நேசிக்கத் தொடங்கு
உலகின் முதல் மொழியாம்
உந்தன் தாய் மொழியினை…

மேலும்

சகாய டர்சியூஸ் பீ - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Sep-2019 4:02 am

உறக்கத்தின் உரையாடலில்
தைரியாமாய் சொல்கிறேன்
என் காதலை – ஆனால்
உன்னுடன் இருக்கையிலே
தவியாய் தவிக்கிறேன்
சொல்வதற்கு . . .

நண்பர்களுக்கு வீராவேசாமாய்
காதல் சொல்ல கற்றுக்கொடுக்கும்…
என் நாவும் – ஏனோ
உன்னிடம் காதலைச்சொல்ல
வரும்போது மட்டும்
நடுக்கத்தில் நடனமாடுதடி…!

ஏதோ பேசனும்ன்னு வரச்சொன்னீங்க
ம்ம்… சொல்லுங்க
என என் விழி நீ பார்த்த நொடி
என் இதயத்துள் ஏதோ ரசாயண மாற்றம்..!

பேசுவதற்கு
கோடி வார்த்தைகள் இருந்தும்
உதடுகள் ஏனோ அசையவில்லை
ஆணுக்கும் வீரம் உண்டாம்
எந்த மடையன் சொன்னது..?

மேலும்

சகாய டர்சியூஸ் பீ - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2019 11:54 am

வான்மகளின் காதல் சேட்டை
பனித்துளியில் நானிலம் நனைய...
பின்னிரவில்
உன் வரவிற்காய் அலையோரம் நான்..!

சடுதியில் கரமொன்று தோள்பற்ற
நரம்பினில் சில்லென்று குளிர்பரவ
சிலையான என்முன்னே
பார்காணா பேரழகியே நீ...

மருளும் மான்விழியால் என்னாச்சு
நீ வினவ...
உருகும் பனிச்சிலை ஒன்று
உயிர்வரை நனைக்க
நான் கற்சிலையாவதில் விந்தையென்ன கண்ணே
மறுமொழி கூற...

நாணத்தால் மங்கை உன் பாதவிரல்கள்
நிலமதில் காதல் சுவரங்கள் மீட்ட..
உயிர்பெற்ற உடலோ உனை லேசாய் அணைக்க
பளிங்கு முகத்தில் கோபரேகை படர..
சினத்தால் சிவந்த இதழை
கோபம் தீர சுவைக்கவா இன்பம் கூட
காதோரம் நான் கிசுகிசுக்க...

சீ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே