என் இனிய தனிமையே

இருள் தழுவும் இரவு
எழுந்து வரும் நிலவு
கிசுகிசுத்தபடி
நகரும் வான்மீன்கள்
தெளிவற்ற பாதை
பதற்றமான பயணம்
உடன் வரும் நீ!

மனம் மயக்கும்
மெல்லிசையாய்
வாடை முகம்
தழுவினாலும்...
துடிக்கும் என்னிதயத்தின்
ஆழத்தில்
ஏனோ வெறுமை..!

உன் தோளில்
சாய்கிறேன்...
உள்ளத்தின் காட்சிகள்
விழிவழி காண...
என் தேடலின்
அர்த்தம்
உணரச் செய்கிறாய்..!

உன் வலிமை கொண்டு
என் உடைந்த
இதய பாகங்களை
சரி செய்கிறாய்...!
இரணங்களை
கணங்களில்
மறைக்கிறாய்...!

எனை மீட்டு
புது வெளிச்சம்
பாய்ச்சும் பாதைகளை...
கண்முன்
விரியச் செய்கிறாய்..!
உடன் உலா வரும்
என் இனிய தனிமையே..!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (4-Oct-23, 11:06 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 1741

மேலே