காத்திருப்பில் நான்

வெண்சங்கு பூத்திருக்கும்
கடற்கரை

முத்தமிட ஆர்ப்பரிக்கும்
அலைகள்

துள்ளி விளையாடும்
சிறுமீன்கள்

மகிழ்ந்திருக்கும்
நாரைகள்

பசித்திருக்கும்
நீலக்கடல்

உணவாகும்
செந்தணல் பரிதி

பசிதனித்து
மேலெழும் நிலா

உள்ளம் அள்ளும்
மாலை

தனிமைக் காற்று
உடல் வாட்ட

உன்நினைவுகளை
போர்வையாக்கி

கரையோரம்
நீண்ட காத்திருப்பில்

உனக்காய் நான்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (11-Mar-22, 1:55 pm)
பார்வை : 2339

மேலே