உதவி
உதவி !
-
உதவி அன்பின்
அக்கரையின் வெளிப்பாடு /
வெளிப்பாடு பிறருக்கும்
துணையாகும் நற்பேறு /
நற்பேறு கிடைத்திடுமே
நல்லோர்க்கு உதவுவதால் /
உதவுவதால் தீமைவரும்
சிலநேரம் அஞ்சாதே /
அஞ்சாதே அண்டினோர்க்கு
அடைக்கலமும் தருவதற்கே /
தருவதற்கே இருகரங்கள்
செய்திடுவாய் உதவி !
-யாதுமறியான்.