உலக நண்பர்கள் தினம்

நண்பனுக்கு இலக்கணம் என்ன?
அவன் நமது உறவுக்காரன் இல்லை

உண்மையான நட்பின் பொருள் என்ன?
உயிரையும் தியாகம் செய்யும் மனப்பான்மை

நான் எத்தனை நண்பர்களை பார்த்திருக்கிறேன்?
பெயருக்கு நண்பர்கள் ஆயிரம் கண்டிருக்கிறேன்

இங்கே நிலவிவரும் நட்புகள் யாவும் எப்படிப்பட்டன?
பணம் மற்றும் கேளிக்கைக்காக மட்டுமே இயங்குகிறது

ஏன் உலகில் உண்மையான நட்புகளை பார்ப்பது அரிது?
பணத்தை விட்டு நட்பை பார்ப்பவரை, பார்ப்பதே அரிது

உன்னுடைய வாழ்வில் உயிர்த்தோழன் என்று உண்டா?
தோழனே இல்லை, பிறகு கேள்வியில் அர்த்தம் உண்டா

உங்கள் எவருக்கேனும் தன்னையே தரும் நண்பர் ஒருவர்
உண்மையில் உண்டு என்றால், நீங்கள் கோடியில் ஒருவர்

ஜாய்ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (4-Aug-24, 3:20 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 38

சிறந்த கவிதைகள்

மேலே