மனக்கவிஞன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மனக்கவிஞன் |
இடம் | : உடுமலைப்பேட்டை / சென்னை -க |
பிறந்த தேதி | : 17-Dec-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 1965 |
புள்ளி | : 519 |
*கவிதைகளின் மேல் இப்போது மோகம் கொண்டுள்ள நான் எழுதிய கவிதைகள்
*மனதில் கொண்ட எண்ணங்களை கூறும் மனக்கவிஞன்
*என் படைப்புகள் அனைத்து தமிழ் கவிஞர்களுக்கும் சமர்ப்பணம்
*புதியதாக கிறுக்கும் என்னை நீங்கள் எழுத வைக்க நினைத்தால் உங்கள் கருத்துகளை +919843788058 என்ற என்னில் கூறுங்கள்
-மனக்கவிஞன்
தூரிகையை தத்தெடுத்த
வண்ணக் குடங்கள்
ஓவிய மை தீட்டி
காயாத
ஈர நுனியில்
நீடித்து மறைகிறது
-மனக்கவிஞன்
மேகங்களின்
அசைவில்
சூரியனின் இசைவு
வான் தெருவில் மனது
உருக ஆரமிக்கிறது
-மனக்கவிஞன்
கண்கூசாத சூரியன்
அமைதியாக வருகிறது
விருப்பமில்லாத வருகை என்றபோதும்
கட்டி இழுக்கும்
அடர்ந்த மேக கூடுகள்
கருமேகம் சூழ்கிறது
-மனக்கவிஞன்
மனம் நீந்திய மழைத்துளி
கணம் இது என்றது
செவிவழி
மகிழ்ந்து பாயும் கன வான் மேகம்
தவழ்ந்து செல்லும்
புது மேகம் ஆனது
கடலோடு கலந்து
-மனக்கவிஞன்
ஆமை போல சென்ற நாட்கள்
சட்டென்று கொஞ்சம் முயலாக மாறியது
மயக்கங்களும் மசக்கையும் ஆட்கொண்டது
ஐந்து மாதங்கள் எப்படி கடந்தேன்
என்று அப்படி ஒரு கேள்வி
அயர்ந்து தூங்கிய என்னை
ஏதோ ஒன்று கொஞ்சம் சிலிர்க்க வைத்தது
இது என்ன என்று ஒரு கேள்வி
அதற்கு பதிலோ
பூ கால்கள்
அசைய ஆரம்பித்தது
என்னை தொட்டது
பூமகள் அசைகிறாள் என்று
உணர்ச்சிகளால் பிரிக்கப்பட்டு பெயர் சூட்டப்பட்ட உறவுகள்
-மனக்கவிஞன்
துள்ளிக் குதித்த மனது
காற்றில் நிதானமாக உலவியது
முறைத்து பார்த்த பறவை
-மனக்கவிஞன்
மழை குடை விரித்த வானம்
சுயநலம் இன்றி
அனைவரையும் போர்த்தி நனைந்தது
-மனக்கவிஞன்
பிரியமானவர்கள் வீட்டுக்கு வந்ததால்
பிரியா விடை கொடுக்கக் காத்திருந்த தோசை கல்
-மனக்கவிஞன்
சிவந்தி
செந்நீரில் செழித்திருக்க
நெற்றியில் மிலிர்ந்திருக்க
மண்பானைகளின் ஆதாரமாய்
மயில் தோகைகளின் கூடாரமாய்
அந்தியின் சகுனமாக
பிந்திமனதி புருவங்களின் வேலியாக
கோயில் சுவற்றினில் செங்குத்தாக
செம்பூத்தின் கண்க(ள்)ளில் வாயிலாக
மிளகாயின் காரமாக
மிளகாய் பஜ்ஜியின் ஓரமாக
உதிரங்களின் தொடரியாக
தொடர்விபத்துக்களின் கூலியாக
மூவண்ணத்தின் தொடக்கமாக
முடியும் வாயின் ஓரம் வெற்றிலையாக
-மனக்கவிஞன்
நடமாடும் நதிகள் 54
1, காலணி தைப்பவன்
தைக்கிறான் பாதசுவடுகளோடு
பித்தவெடிப்புகளோடு
2, பிள்ளையின் பாசத்தை
நிறைவேத்துகிறாள் அம்மா
அடகுக் கடைகளில்
3, பசுமை விவசாயி
குளிக்கிறான்
கட்டனக் கழிப்பறையில்
4, போக்குவரத்து காவலர் காத்திருந்தார்
அவர் இடத்தில்இருக்கும்
வண்டியை எடுக்க
5, ராணி தேனியை காத்துக் கொண்டிருந்தது
ஆண் தேனீக்கள்
கொலை செய்த பெண்சடலம் முன்பு
6, புன்னகையை சொல்லிக்கொடுத்தார்கள்
செய்முறை விளக்கத்தில்
பொக்கை வாய் பாட்டிகள்
7, கசாப்பு கடைகளின்
வெட்டுக்கத்தி காத்திருந்தது
அறுவடை செய்ய
8, வெள்ளை வேட்டி வாங்கினார்
வயலில் இறங்கும்
விவசாயி
9,
பெற்றெடுத்தப் பிள்ளைகள் பின்னாளில் பார்க்குமென்று
உற்றுவுற்று பார்க்கும் உறவுகளே! – கற்றபின்னே
கைப்பிடிக்கும் காரிகையின் சொல்கேட்டு கைகழுவும்
மெய்யுணர்ந்து மண்மேல் மரமொன்று நாட்டுங்கள்.
பொய்யான பந்தங்கள் போனாலும் வாழ்வினிலே
கைகொடுக்கும் காலம் கனிந்து.
*மெய்யன் நடராஜ்