சிவந்தி
சிவந்தி
செந்நீரில் செழித்திருக்க
நெற்றியில் மிலிர்ந்திருக்க
மண்பானைகளின் ஆதாரமாய்
மயில் தோகைகளின் கூடாரமாய்
அந்தியின் சகுனமாக
பிந்திமனதி புருவங்களின் வேலியாக
கோயில் சுவற்றினில் செங்குத்தாக
செம்பூத்தின் கண்க(ள்)ளில் வாயிலாக
மிளகாயின் காரமாக
மிளகாய் பஜ்ஜியின் ஓரமாக
உதிரங்களின் தொடரியாக
தொடர்விபத்துக்களின் கூலியாக
மூவண்ணத்தின் தொடக்கமாக
முடியும் வாயின் ஓரம் வெற்றிலையாக
-மனக்கவிஞன்