தேடல்

வெயிலுக்கு ஒதுங்க
நிழல் தேடுகிறேன்
நிழல்
சூடாகத் தகிக்கிறது.
*
குளிர் புங்கை நிழல்
கொடுத்தாலும்
சூரிய வெப்பம் தாங்கி
சுணக்காமல்
சும்மா இருக்கிறது
மரம்.

எழுதியவர் : ந க துறைவன் (17-Apr-18, 2:35 pm)
Tanglish : thedal
பார்வை : 80

மேலே