முகிலே என்ன ஊடல்

மூடிக் கிடந்த வானம்
கோடைக்கு கொஞ்சம் நிழல் தந்தது
பொழிந்தால் இன்னும் குளிர்ச்சிதான்
முகிலுக்குப் பொழிய மனமில்லை
விலகிச் சென்றது
பொழிந்தால் என்ன
முகிலே எங்களுடன் என்ன ஊடல் என்றேன்
காட்டையழித்து ஓசோனை ஓட்டையாக்குவதை நிறுத்துங்கள்
பொழிவதைப் பற்றி யோசிக்கிறேன் என்றது !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-18, 10:49 pm)
பார்வை : 415

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே