நிரப்பப்படாத பக்கங்களை எப்போது நிரப்புவாய் என்னவனே

நிரப்பப்படாத பக்கங்களை எப்போது நிரப்புவாய் என்னவனே

உன் முகம் காண முப்பொழுதும் காத்திருக்கிறேன்
உன் கண்களோடு காதல் கதை பேசும் நாள் எப்போது என ஏங்குகிறேன்
மீட்டாத வீணையாக நான்
உன் விரல் மீட்டும் நாளை எண்ணி எதிர்நோக்குகிறேன்
கனவிலும் நினைவிலும்
நீங்காத உன் நினைவுகளால்
நித்தமும் நான் தவிக்கிறேன்
உன் கைதொடமால் மெய் தொடாமல்
என் வாழ்வை நிரப்பப்படாத பக்கங்களாய் எண்ணங்களால் என்னை ஏங்க வைக்கிறாய்
உன் கை தொட்டு மெய் தொட்டு
என்னில் நிரப்பப்படாத பக்கங்களை எப்போது நிரப்புவாய் என்னவனேjQuery17107966915955659706_1739715633634?

எழுதியவர் : M. Chermalatha (16-Feb-25, 7:49 pm)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 48

மேலே