கோடி
கோடி
அசதிக்கு அளவன்ஸ் கொடுத்திட
விவரம் கேட்கா விசிறி
வீசிய குளிர்காற்று சூழ்ச்சி
மறு நாள் மறந்து விட்டது
எழுப்ப என்னை …!
நேற்று வைகோள் கோடியில்
கண்டும் காணாது போன
பங்காளி கட்டமைப்பு
கண்ணீர் அஞ்சலி
கடுகளவு நீத்தது !
வருத்தம் எனக்கு இல்லை !
எவன் இருந்தால் எனெக்கென்ன ?
கூப்பிட்டால் கூடவா வருவார்கள் !
பழகிய நண்பரோடு
நலபுலன் விசாரிக்க…..!
முன்பு கேட்டவை நிறுவையில் நிற்க.....
விளைச்சல் அறுவடை சரிபாதி !
வருத்தம் வேண்டா இனி.....
இடும் கோடி வேண்டாம் எனக்கு
இட்ட பெயர் ஏற்கா என் காது !