கண்ணுக்குக் காதல் அழகு

கோணுதல் கொடிக்கு அழகு
கோணாத செங்கோல் அரசுக்கழகு
நாணுதல் பெண்ணுக்கு அழகு
நாணாத பெண் தமிழச்சியோ சொல்லு
தீண்டுதல் தென்றலுக்கு அழகு
தீண்டாமை ஆணுக்கு அழகன்று
தேய்தல் வான்நிலவுக்கு அழகு
தேயாதநீ பூமிக்கு அழகு
பொய் கவிதைக்கு அழகு
பொய்யாமை கார்முகிலுக்கு அழகு
குற்றாலத்தில் அருவி அழகு
குளிக்காதவனுக்கு மேனி அழுக்கு
கொடைக்கானலில் தேனிலவு அழகு
கொடை வள்ளலாய் நீ அவளுக்கு வழங்கு
கண்ணுக்குக் காதல் அழகு
கண்டு கொண்டவர்க்கு வாழக்கை அழகு

எழுதியவர் : கவின் சாரலன் (16-Feb-25, 10:09 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

சிறந்த கவிதைகள்

மேலே