தாய் தான் என் அழகிய சிண்ட்ரெல்லா

பத்திங்கள் பாசத்துடன் பாதுகாப்புடன் சுமந்து
மறு பிறப்பு எடுத்து
மரண வேதனையிலும்
மன மகிழ்ச்சியுடன் தன்னுயிராய் இன்னுயிராய்
ஈன்றெடுப்பாள் - தாய்
தன் குழந்தை அழுதாள் தானும் அழுதிடுவாள் - தாய்
தான் பசியாக இருந்தாலும் தன் குழந்தையின் பசியை தாங்கிடாது பசியாற்றுபவள் - தாய்
தனக்கென ஏதும் இல்லாமல் தன் குடும்பத்துக்காக தன்னை அர்பணித்தவள் - தாய்
விழா நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் ஓயாத வேலையை விருப்பமுடன் பார்ப்பவள் - தாய்
ஒவ்வொரு நிமிடமும் தன் குடும்பத்தில் உள்ளவர்களை பாசத்துடனும் அன்புடனும் பாதுகாக்கும் குல தெய்வம் - தாய்
அன்புள்ள தாயே நீ தான் எப்போதும் என் அழகிய சின்ட்ரெல்லா!!!

எழுதியவர் : M. Chermalatha (16-Feb-25, 7:56 pm)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 19

மேலே