கை கொடுக்கும் கை
பெற்றெடுத்தப் பிள்ளைகள் பின்னாளில் பார்க்குமென்று
உற்றுவுற்று பார்க்கும் உறவுகளே! – கற்றபின்னே
கைப்பிடிக்கும் காரிகையின் சொல்கேட்டு கைகழுவும்
மெய்யுணர்ந்து மண்மேல் மரமொன்று நாட்டுங்கள்.
பொய்யான பந்தங்கள் போனாலும் வாழ்வினிலே
கைகொடுக்கும் காலம் கனிந்து.
*மெய்யன் நடராஜ்