இயற்கை

கணக்கு வழக்கின்றிக் கொட்டிக் கிடக்குது
காரிருள் விலக்கும் மின்மினிகள் வானத்திலே
மின்மினி தம் இடம் விட்டு இடம்
நகரும் வேளையில்
பொட்டுப் போல் உருண்டு விழும்
பூமி எனும் பர்வதம்மேலே
நாம் அதன் பொலிவைக் காணும் முன்னே
மின்மினியின் தோற்றம்
பொசுங்கியே மறைந்து விடும்
அழகிய தோற்றம் அரை நொடியில்
அர்த்தமற்றதாகி விடும்,
ஆண்டவனின் அற்புத விளக்குகள் மின்மினிகள்
அண்ட சராசரம் அபூர்வ சாகஜம்
ஆகாய மேகங்களின் மேலே
நிகழ்த்திக் காட்டுகின்றன மின்மினிகள் ,
பக் பக் என்று ஒளி ஜாடை
காண்பவர் கண்களுக்கு இனிய விருந்து
மின்மினியின் தோற்றங்கள்
மனிதன் தோன்றும் முன்னே
தோன்றிய அத்தனை படைப்புக்களும்
மனிதனால் உணர்ந்து ஊகிக்க முடியாத
இயற்கையாகி நிற்கிறது இன்றும் ,
இது படைத்தவனின் சாகஜமே
உணர முடிந்தால் மனிதனும் தெய்வமே