பூ கால்கள்
ஆமை போல சென்ற நாட்கள்
சட்டென்று கொஞ்சம் முயலாக மாறியது
மயக்கங்களும் மசக்கையும் ஆட்கொண்டது
ஐந்து மாதங்கள் எப்படி கடந்தேன்
என்று அப்படி ஒரு கேள்வி
அயர்ந்து தூங்கிய என்னை
ஏதோ ஒன்று கொஞ்சம் சிலிர்க்க வைத்தது
இது என்ன என்று ஒரு கேள்வி
அதற்கு பதிலோ
பூ கால்கள்
அசைய ஆரம்பித்தது
என்னை தொட்டது
பூமகள் அசைகிறாள் என்று