அவளுக்கென்று ஒரு கனவு
💚💛💚💛💚💛💚💛💚💛💚
*அவளுக்கென்று*
*ஒரு கனவு*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️
என்னை
நட்டு வைப்பதற்கு
சரியான இடமாக இருந்தது
உன் இதயம் தான்... .
என் மனச்செடியில்
உன் நினைவு பூக்களே !
பூக்கின்றது....
கண்ணுக்குள்
ஏதோ !
உருத்திக் கொண்டே ! இருந்தது
எடுத்துப்பார்த்தேன்
உன்னுடைய முகம்..... .
உன் பார்வையால்
ஏற்றி வைத்தாய்
என்னில்
கவிதை தீபத்தை.....
"என் இதயத்தை
திருடி விட்டாய்" என்று சொல்லி
உனக்கு
திருட்டுப்பட்டம் சூட்ட
நான் விரும்பவில்லை....
காதல் திருடுவது அல்ல
இதயங்களை
"பரிமாறிக் கொள்வது....."
நான்
பட்டுப்புழுவாக இருந்தேன்
நீ கூடாக வந்திருக்கிறாய்....
உன்னைப் பற்றி
நான் கனவு காண
போவதில்லை....
உனக்கென்று
ஒரு கனவு இருக்கும் அல்லவா?
எனது விடியல்
கதிரவன் ஒளியில் இல்லை
உன் காலடி ஓசையில்
இருக்கிறது......!!!
*கவிதை ரசிகன்*
❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚❤️