Persia - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Persia |
இடம் | : Tirunelveli |
பிறந்த தேதி | : 26-Oct-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 267 |
புள்ளி | : 75 |
nala tholzi
ஆமை போல சென்ற நாட்கள்
சட்டென்று கொஞ்சம் முயலாக மாறியது
மயக்கங்களும் மசக்கையும் ஆட்கொண்டது
ஐந்து மாதங்கள் எப்படி கடந்தேன்
என்று அப்படி ஒரு கேள்வி
அயர்ந்து தூங்கிய என்னை
ஏதோ ஒன்று கொஞ்சம் சிலிர்க்க வைத்தது
இது என்ன என்று ஒரு கேள்வி
அதற்கு பதிலோ
பூ கால்கள்
அசைய ஆரம்பித்தது
என்னை தொட்டது
பூமகள் அசைகிறாள் என்று
அத்தனை இன்பம்
அத்தனை எதிர்பார்ப்பு
அவள் கருவில் இருக்கிறாள் என்று
சட்டென்று ஒரு சலனம்
குருதியை கண்ட நொடியில்
கண்ணே ஒரு திங்கள் கூட
நான் இன்பம் பெற கூடாதா
இம்முறையும் என்னை ஏமாற்றி விட்டாயா
என்று மருத்துவரிடம் ஓடினேன்
அதனை குழப்பங்களோடு
மருத்துவர் கூறினார்
உன் இதயம் துடிக்க தொடங்கியது என்று
உனக்கு என்னடி இந்த விளையாட்டு
உன் துடிப்பு கேட்கும் வரை
என் துடிப்பல்லவா நின்று போனது
என் செல்ல தங்கமே!!
நாட்கள் நகர்வதை மறந்தேன்
அப்படி ஒரு மயக்கமும் சோர்வும்
உடல் நோவு அடைந்ததோ என்று ஒரு குழப்பம்
சட்டென்று ஒரு நினைப்பு
இது நான் பல நாள்
காத்திருந்த தவிப்பின் நாளோ....
கண்கள் நம்ப மறுத்தது
அந்த நொடியை
பலமுறை ஒரு கோடு பார்த்த விழிகள்
இம்முறை இரு கோடுகளை
என்னவனும் காத்திருந்தான் இந்த நொடிக்காக
நாட்கள் அல்ல வருடங்களாக.....
அவளின் முதல் அறிவிப்பிற்காக
அனுதினமும் ஒருமுறையாவது
பின்பங்களில் தோன்றி மறையும் ஒரு காட்சி
கலைந்த உன்னை
குருதியும் சதையுமாக
உள்ளங்கைகளில் ஏந்திய நொடி
என்ன கோபம் என் செல்லமே
உனக்கு என் மேல்
உன் முகம் காண நன் துடித்த
நாட்களை
முற்றிலும் என் மறந்தாயோ
என்னுள் உதித்த என் உயிரே
என்னுள் புதைந்த வழிகள்
உன்னக்கு எட்டாமல் தான்
என்னை விட்டு பிரிந்தாயோ
என் கண்மணியே
கண்கள் குளமாகிறதடி
உன்னை நினைக்கையில்
உன் கண்கள்
உன் குட்டி பாதம்
உன் குறும்புக் கைகள்
உலகை மறக்கச்செய்யும்
உன் சிரிப்பு
உன்னில் என்னை நான் காணும்
உன் மதிமுகம்
என்று என் கற்பனைகளில்
வரைந்த உன்னை
நிஜத்தில் ஏந்த
ஏனோ குடுப்பனை இல்லையே
கண்ணீரில் பயணிக்கும் என்னை
தேற்ற ஏன் உன் வருகை
இல்லாமலே போயிற்று
உன மழலை கேட்க
தவம் கொண்ட என்மேல்
ஏனடி இந்த கோபம் உனக்கு
மறுபிறப்பின் வலியை
உணர்கிறேன் என்னாளும்
என் நிலைக்கண்டு மனமிறங்கி
வருவாயா
இல்லை வரமறுத்து
நான் பெறாத புதுப்பட்டத்தை
சேர்க்கபோகிறாயா
நெடு நாட்களுக்கு பிறகு
எழுதுகிறேன் .....உன் நினைவுகளில் சிக்கி
கொஞ்சம் இருள் சூழ்ந்த
மனம் மயக்கும் மாலை
அங்கங்கு சிதறும் மலை துளிகள்
ஜன்னலின் கம்பிகளில் உற்று பார்த்த பூக்கள்
இதமான குளிர்
இதழில் புன்னகை
செவிகளில் எனக்கு விருப்பமான பாடல்
அனைத்தும் அழகாக இருக்கிறது
இந்த மாலையில் மெய் சிலிர்க்கும் காற்று
அனைத்தையும் ரசிக்கிறேன் அன்பே
ஆனாலும் ஒரு வருத்தம்
என் அருகில் நீ இல்லை என்று
முழுமையை அனுபவிக்க முடியவில்லை
உன் ஸ்பரிசங்கள் இல்லாததினால் ..............