கலைந்த நொடி
அனுதினமும் ஒருமுறையாவது
பின்பங்களில் தோன்றி மறையும் ஒரு காட்சி
கலைந்த உன்னை
குருதியும் சதையுமாக
உள்ளங்கைகளில் ஏந்திய நொடி
என்ன கோபம் என் செல்லமே
உனக்கு என் மேல்
உன் முகம் காண நன் துடித்த
நாட்களை
முற்றிலும் என் மறந்தாயோ
என்னுள் உதித்த என் உயிரே
என்னுள் புதைந்த வழிகள்
உன்னக்கு எட்டாமல் தான்
என்னை விட்டு பிரிந்தாயோ