அவளின் முதல் அறிவிப்பு

நாட்கள் நகர்வதை மறந்தேன்
அப்படி ஒரு மயக்கமும் சோர்வும்
உடல் நோவு அடைந்ததோ என்று ஒரு குழப்பம்
சட்டென்று ஒரு நினைப்பு
இது நான் பல நாள்
காத்திருந்த தவிப்பின் நாளோ....
கண்கள் நம்ப மறுத்தது
அந்த நொடியை
பலமுறை ஒரு கோடு பார்த்த விழிகள்
இம்முறை இரு கோடுகளை
என்னவனும் காத்திருந்தான் இந்த நொடிக்காக
நாட்கள் அல்ல வருடங்களாக.....
அவளின் முதல் அறிவிப்பிற்காக

எழுதியவர் : (29-Aug-24, 10:41 am)
சேர்த்தது : Persia
பார்வை : 127

மேலே