புரிதல் நமக்குள் குறையும் வரை
கண்களை விற்று ஓவியமா
சொல்லடி பெண்ணே சாத்தியமா
வலிகொடுத்தால் வழி கிடைக்குமா
தடையே உன் வலி தானம்மா
உலகமே எதிர்க்க துணிந்து நிற்பேன்
நீ ஒரு நொடி மறக்க உயிர் துறப்பேன்
கனவில் கூட காதலிப்பேன்
சொல்லடி எப்படி உன்னை மறப்பேன்
தாயை பிரியும் வலி கொடுத்தாய்
ஒரு சேய் போல் என்னை கதற விட்டாய்
புரிதல் நமக்குள் குறையும் வரை
என் பாசம் புரிய போவதில்லை...