நடமாடும் நதிகள் 54

நடமாடும் நதிகள் 54

1, காலணி தைப்பவன்
தைக்கிறான் பாதசுவடுகளோடு
பித்தவெடிப்புகளோடு

2, பிள்ளையின் பாசத்தை
நிறைவேத்துகிறாள் அம்மா
அடகுக் கடைகளில்

3, பசுமை விவசாயி
குளிக்கிறான்
கட்டனக் கழிப்பறையில்

4, போக்குவரத்து காவலர் காத்திருந்தார்
அவர் இடத்தில்இருக்கும்
வண்டியை  எடுக்க

5, ராணி தேனியை காத்துக் கொண்டிருந்தது
ஆண் தேனீக்கள்
கொலை செய்த பெண்சடலம் முன்பு

6, புன்னகையை சொல்லிக்கொடுத்தார்கள்
செய்முறை விளக்கத்தில்
பொக்கை வாய் பாட்டிகள்

7, கசாப்பு கடைகளின்
வெட்டுக்கத்தி காத்திருந்தது
அறுவடை செய்ய

8, வெள்ளை வேட்டி வாங்கினார்
வயலில் இறங்கும்
விவசாயி

9, திரையில் கவர்ச்சி படத்தை
பார்த்தனர்
கண்ணகி திரை அரங்கில்

10, பிணத்தை பார்த்தும் பணம் வரவில்லை
இறந்தது அனாதை பிணம்


-மனக்கவிஞன்

நன்றி,


ஹைக்கூ என்னால் உருவாக

#எடுத்துக் காட்டிய
சகோதரர் திரு. ஜின்னா

மற்றும்

#சகோதரர் திரு. முரளி
#சகோதரர் திரு. ஆண்டன் பெனி
#சகோதரர் திரு. கமல் காளிதாஸ்

#எடுத்துக் காட்டாக அமைந்த
பல படைப்புகள்.

#எழுத்துத் தளத் தோழமைகள்.

எழுதியவர் : மனக்கவிஞன் (30-Mar-16, 7:22 am)
பார்வை : 509

மேலே