என்றும் அசையாத உள்ளத் தவர் - ஆசாரக் கோவை 52

இன்னிசை சிந்தியல் வெண்பா

படிறும் பயனிலவும் பட்டி யுரையும்
வசையும் புறனும் உரையாரே யென்றும்
அசையாத உள்ளத் தவர். 52

- ஆசாரக் கோவை

பொருளுரை:

ஒழுக்கத்தில் தவறாத மனமுடையவர்கள் வஞ்சனைச் சொல், பயனற்ற சொல், நாவடக்கமில்லாத சொல், பழிச்சொல், புறங்கூறுதல் ஆகிய சொற்களை எக்காலத்திலும் சொல்லமாட்டார்கள்.

பட்டி - கள்ளம், இங்கு நாவடக்க மின்மை, படிறு – வஞ்சனை
புறங்கூறல் - முன் நின்று புகழ்ந்து பின்நின்று இகழ்ந்துரைத்தல்,
‘பட்டியுரையாம் வசையும்' என்றும் பாடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-25, 1:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 16

மேலே