நிழல் உலகம்

மென்மையான
முத்தத்தின் சத்தத்தில்...
இரு மனங்களின்
ஏக்கங்கள் தீரும்
உன்னத உலகத்தில்...
உன் வருகைக்காய்
காத்திருக்கும் நான்!

பின்னிப் பிணைய
ஏங்கி இருக்கும்
காலம் பிரித்த....
இரு இதயங்களின்
வருகையை...
கண்சிமிட்டியபடி பார்த்திருக்கும்
நட்சத்திர கூட்டங்கள்!

உன்வாசனை சுமந்த
காற்று என்முகமருகே
நடனமாடி கிசுகிசுக்க
கண்மூடுகிறேன்....
நினைவின் அணைப்பில்
உன்அன்பின் கதகதப்பு...
கரைகிறது மணித்துளிகள்!

தூரத்தில் நிலவாய்
நீ ஓடிவர...
வறண்ட என்னிதயத்தில்
அன்பின் நீர் ஊற்றேடுப்பு...
பாய்ந்துவரும் காதலில்
விழியோரம் சிறுதுளி
எட்டிப் பார்க்கிறது!

கைகளில் நீவர
உடல்கள் ஒருசேர
இறுக்கமான அணைப்பில்...
இதழ்களின் இணைப்பில்...
காதலின் பரிமாற்றம்..!
பெருவெள்ளமாய் கரைந்தோடுது
கண்கள்வழியே பிரிவின்துயரம்!

செவிவரை வழிந்த நீர்
உள்ளத்தை உலுக்க
கண் திறந்தேன்...
அருகில் நீயில்லை
ஆனாலும்..
தனிமைபாரம்
அழுத்தவில்லை!

காலத்தின் கொடூரம்
சிறிது நம்மை
பிரித்தாலும்...
பிரிவினை நெருப்பாய்
சுட்டாலும்...
உன்மீதான காதல்
என்றுமே வளர்கிறது...

சத்தமில்லா மென்முத்தங்கள்
பரிமாறப்படும்...
நிழல் உலகம்
நம்மை இணைப்பதால்!

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (19-Sep-23, 9:35 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
Tanglish : nizhal ulakam
பார்வை : 964

மேலே