பூத்துப் பூத்துப் போரடித்த பூக்கள்

பூத்துப் பூத்துப் போரடித்த பூக்கள்
பூவாமல் மொட்டாக நின்றன
வீசி வீசி போரடித்த தென்றல்
வீசாமல் ஒதுங்கி நின்றது
பார்த்துப் பார்த்து போரடித்த கவிஞன்
எழுதாமல் நின்றான்
சிரித்துச் சிரித்து போரடிக்காத நீ
புன்னகை பூத்து வந்தாய்
ஒதுங்கி நின்ற உன் உறவுகள் எல்லாம்
ஓசைப்படாமல் வேலைக்குத் திரும்பின

எழுதியவர் : கவின் சாரலன் (19-Sep-23, 7:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 72

மேலே