வானவில்லாய் நீ

கொஞ்சும் இனிய மாலை வேளை இன்னும்
செஞ்சுடர் கதிரோன் முழுவதுமாய் மறையவில்லை
கொஞ்சம் மழைதூற்றல் தந்தது சிறுமேகக்கூட்டம் ;
குணதிசையில் முழுவதுமாய் அக்கணமே வானில்
வந்து பதிந்தது ஒரு வண்ண வண்ண வானவில் ,
அதைக் கண்டு ரசித்தபோது நான் என்னவளே ,
அவ்வானவில்லின் ஒவ்வொரு நிறத்திலும் உந்தன்
அழகு மேனியின் அங்கம் ஒவ்வொன்றும்
திரண்டுவந்து பொலிவது கண்டேன் கண்டேனே அவ்வானவில்லில் முழுவதுமாய் உன்னையே அல்லவா நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (18-Sep-23, 11:42 pm)
Tanglish : vaanavillaai nee
பார்வை : 113

மேலே