தமிழா ! உனக்கு எதிரி தமிழா?
*தமிழா *
*உனக்கு எதிரி*
*தமிழா?*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
பாரதிதாசனே !
நீ தமிழை அமுதென்று
பாடினாய்.......
தமிழனோ
அதை கண்டு
நஞ்சு என்று ஓடுகிறான் ....
தமிழை
உயிருக்கு சமம் என்று
எழுதினாய்.....
தமிழனோ
ஆங்கிலத்திற்கு
சமமாகாது என்று
அடித்துச் சொல்கிறான்.....
தமிழே சமூகம்
விளைவதற்க்கு நீர் என்று
கருதினாய்.....
அந்தச் தமிழ் சமூகமோ
ஆங்கில நீருக்கு
அடிமைப்பட்டு கிடக்கின்றது....
எங்கள் வாழ்வுக்கு
நிரூபித்த ஊர் என்றாய்....
தமிழனோ
தமிழை ஊரை விட்டு
ஓட்டுவதற்கு
ஓயாமல் உழைத்துக்
கொண்டிருக்கிறான்.......
நீயோ
தமிழை
இளமைக்கு பால் என்றாய்
இன்றைய தமிழனோ !
தமிழ் இளம் வயதினறை
பாழாக்கி விடும் என்று
பயப்படுகிறான்.....
எங்கள்
உரிமை பயிருக்கு
வேர் என்றாய்.....
தமிழனோ
வேரை வெட்டிவிட்டு
கிளை பரப்பு
முயற்சி செய்கிறான்......
அறிவுக்கு
தோள் என்று
அனுபவித்துக் கூறினாய்....
தமிழனோ
ஆங்கிலத்தை
தோள்களில்
சுமந்து கொண்டு
திரிகிறான்......
நம்மை
பெற்றெடுத்த தாய் என்று
தமிழை
பெருமைப்படுத்தினாய்.....
தமிழனோ
தமிழ் தாயை
அனாதை ஆசிரமத்தில்
சேர்த்து விட்டு
ஆங்கில நாயை
வீட்டில் வளர்க்கிறான்......
நீ கடைசியாக .....
"தமிழ் எங்கள்
வாழ்க்கையை
மாற்றி அமைக்கும் தீ "என்றாய்..
இன்றைய தமிழன்
அந்த தீயில் எறிந்திடுவனோ ?
நாளைய தமிழன்
தமிழ் உணர்வோடு
பிறந்திடுவானோ......?
*கவிதை ரசிகன்*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱