தீபஒளி - மலரட்டும் மாற்றங்கள்
இன்பம் கொடுக்கும்
இனிய தீபஒளி
திருநாள் இன்று
இந் நன்னாளில்
இல்லங்கள் தோறும்
இனிக்கும் இனிப்புகள்
இதயங்களில் அன்பின்
சுவையினை பரிமாறட்டும்!
விண்ணில் சீரும் பட்டாசுகள்
மதம்பிடித்த பதர்களின் உள்ளத்தை
சிதறும் மனிதமெனும்
நெருப்பால் பொசுக்கட்டும்!
எத்திசையும் பாய்ந்து வரும்
தீபஒளிக் கீற்றுகள்
சாதி அறுத்து
சமூக இருள் போக்கட்டும்!
புறத்தே
புத்தாடை உடுத்தி
புதுஅலங்காரம் காணும்
மனித மனங்கள்
அகத்தே
இருள் நீங்க
சமத்துவ ஒளியேந்தி
புத்துலகம் படைக்கட்டும்!
அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்!