தீபாவளித் திருநாள் வாழ்த்து
#தீபத் திருநாள் வாழ்த்து
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
நரகாசுரன் இறப்பினிலே
நன்மை… நன்மை
இறப்பு நாளும் சிறப்புதானே
உண்மை.. உண்மை..,!🪔
அழித்தபோது விதைத்தாரே
அரிய வணிகம்
உழைப்பவர்கள் பிழைப்பதற்கு
உரிய வழியும்..!🪔
புத்தாடைப் பட்டாசு
பொன்னா பரணம்
பொட்டுப்பூ விற்பனை
பொழுதும் பொழுதும்..!🪔
நுண்பிணியால் வந்தது
நட்டம் நட்டம்
நோயொழித்துக் காண்கின்றார்
துட்டும்.. துட்டும்..!🪔
வறுமைகள் தீரத்தான்
காலம்… காலம்..
வந்ததுபார் பண்டிகை
வாழ்ந்து பாரும்..,!🪔
ஏற்றிய தீபஒளி
நேர்வினைக் கூட்டும்
என்றுமது நம்குடிலில்
இன்பத்தை நாட்டும்..!🪔
மத்தாப்புப் புன்னகை
இதழ்கள் ஏந்தி
மகிழ்ந்தேதான் கொண்டாடு
தீபம் ஏற்றி..!🪔
அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகளுடன்🌟🌟🎉🎉🎉🎊🎆🎇🎆🧨🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
#சொ.சாந்தி