Ashok4794 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Ashok4794 |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 04-Jul-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 197 |
புள்ளி | : 63 |
CA மாணவன்
இவன்குடி மறந்து மொழியையும் தவிர்த்து
உன்குடி ஏற்று பற்றுடன் இருப்பினும் உங்களில் ஒருவனாய் ஏற்கும் மட்டும்
பொருட்படுத்தவில்லை யாம் - மாறாய்
பேதம் கருதி பிரிவினை கண்டு
அடிமைப்பட்ட சேதி தெரிந்தால்
தலையிட வருகிற படையினை அறிவீர்
குமரியில் எஞ்சிய நாடொன்றுள்ளது
வந்தேரியவனை வாழ்வித்த வம்சம்
விட்டுச்சென்றாலும் விட்டுக்கொடுப்பதில்லை
அறவினை என்னும் மரபினை கொண்டு
தவத்தினை வென்று ஊழ்வினை தொட்டு
பிறவினை இன்றி புகழினை தொட்ட
என் குழந்தைப்பிராய தோழியே
பிறந்தது நட்பு பெயர்இடம் அறியா
நிற்கிறது வளர்ந்து இடம்பெயரா
திரிபற்ற அன்புஈகை புரிதல் நிறைய
நித்தமும் நிதர்சனமாய்
நவதின தாண்டி கடைவரும் தசமியில்
அ-தி-சயம் ஆகி அர்த்தமும் ஆனீர்
ஈரெட்டும் கொண்டு ஈண்டு வாழீர்
சுற்றும் புவியில் எத்திசை புகினும்
மறவேல் நம் கெழுதகையை
திரைப்பட நடிகனானேன்
கையடக்க இயந்திரத்தை மட்டுமே கண்டு
சோறுண்ணும் என் குழந்தைகாக
கல் நெஞ்சம் கொண்டவன்
இரும்பிதயம் உள்ளவன்
கொடியன், அரக்கன், வீரன், கம்பீரன்
ஆண்மகன்என்றதும் உதிக்கும்
இப்பிம்பத்தின் வட்டத்தில்
மனிதம் குறையா வாழும்
ஆண்வர்க்கத்திற்கு எம்மரியாதை
அப்பாவின் அடிகளை தாளாமல் கதறினான்
கலங்கியதோ தந்தவனின் (தந்தையின்) மனம்
அதுவே பெற்றவனுக்கும் அடி பெற்றவனுக்கும் உள்ள பந்தம்
அவ்வடிகளால் எத்தனை முறை அடி மாறாமலும்
அடிபடாமலும் அடிபணியாமலும் நடக்க உதவியது
என்பது வருடங்கள் மட்டுமே கூறும்
தன் தாயின் அன்பையும் அரவணைப்பும்
அவள் உயிரையும் விட்டுத்தரும் அத்தனையும் பெற்று
அவள் மனம் நோக பேசும் மகனைப் பார்த்துள்ளோம்
அந்த வார்த்தையை விட்டதன் வலியை
பகிர மு
உச்சியில் உதிரும் தர்க்கத்தை உதறிவிட்டு
எழுதிய சட்டம் எதிராய் இருப்பினும்
பணம் பண்ணும் நோக்கில்
எழுத்துக்களை திரிக்க அர்த்தத்திற்கு வக்கில்லை
வார்த்தையில் விளையாட சட்டம் ஒன்றும் கவிதை இல்லை
தர்மத்தை வரையறுக்க முற்பட்டதால்
வாதங்களும் விவாதங்களும் விதண்டாவாதங்களும்
விரிந்து கொண்டே செல்கிறது
வழக்குஇருப்பு கரைய வழியில்லை
நியாயம் உணர எழுதிய சட்டம்
கேள்விகளோ ஆனால் சட்டத்தை நோக்கி
அன்று அரசன் கொடுத்த நீதியை ஏற்றுக்கொள்ள
சாசனமும் இல்லை சட்டமும் இல்லை
உரிமைகள் பிறந்தது தான் தவறோ
எந்த தவறில் குற்றமில்லை என்று
கண்டறிய முடிந்த அறிவுடன்
மனிதனுக்கு இன்னொரு முகம் (தலை)
பொய்யிற்கு சாயம் போட
குப்பைத்தொட்டிகள் சுத்தமாக இருப்பது நம் ஊரில் மட்டுமே
கண்டுபிடித்து கொடுங்கள் என் பிள்ளையை
பிறக்கப்போகும் அந்த சிசுவின் ராசி நட்சத்திரம் எனக்கு தெரியாது
தோள்நிறம் என்னவோ பாலினம் என்னவோ எனக்கு தெரியாது
உடல் எடையும் உயரமும் உள்ளிருக்கும் திறமைகளும் எனக்கு தெரியாது
விருதுகளை வெள்ளுமோ விண்வெளிக்கு செல்லுமோ எனக்கு தெரியாது
தெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டு மட்டுமே
எத்iர்காலத்தைக்கூட பிறந்த நேரத்தை கொண்டு சொல்கிறார்கள்
ஆனால் பிறக்குமுன்பே அதன் அடையாளங்களை நான் சொல்கிறேன்
எதைக்கொண்டு என் உறிமையும், திறமையும், கிடைக்கவிருந்த வாய்ப்புகளும் எழுத பட்டதோ
எனக்கு தெரிந்ததெல்லாம் அந்த குழந்தையின் சாதியும் மதமும் மட்டுமே
கண்டுப்பிடித்து கொடுங்கள்!!!
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
கண்டுபிடித்து கொடுங்கள் என் பிள்ளையை
பிறக்கப்போகும் அந்த சிசுவின் ராசி நட்சத்திரம் எனக்கு தெரியாது
தோள்நிறம் என்னவோ பாலினம் என்னவோ எனக்கு தெரியாது
உடல் எடையும் உயரமும் உள்ளிருக்கும் திறமைகளும் எனக்கு தெரியாது
விருதுகளை வெள்ளுமோ விண்வெளிக்கு செல்லுமோ எனக்கு தெரியாது
தெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டு மட்டுமே
எத்iர்காலத்தைக்கூட பிறந்த நேரத்தை கொண்டு சொல்கிறார்கள்
ஆனால் பிறக்குமுன்பே அதன் அடையாளங்களை நான் சொல்கிறேன்
எதைக்கொண்டு என் உறிமையும், திறமையும், கிடைக்கவிருந்த வாய்ப்புகளும் எழுத பட்டதோ
எனக்கு தெரிந்ததெல்லாம் அந்த குழந்தையின் சாதியும் மதமும் மட்டுமே
கண்டுப்பிடித்து கொடுங்கள்!!!