கண்டுபிடித்து கொடுங்கள்

கண்டுபிடித்து கொடுங்கள் என் பிள்ளையை
பிறக்கப்போகும் அந்த சிசுவின் ராசி நட்சத்திரம் எனக்கு தெரியாது
தோள்நிறம் என்னவோ பாலினம் என்னவோ எனக்கு தெரியாது
உடல் எடையும் உயரமும் உள்ளிருக்கும் திறமைகளும் எனக்கு தெரியாது
விருதுகளை வெள்ளுமோ விண்வெளிக்கு செல்லுமோ எனக்கு தெரியாது
தெரிந்ததெல்லாம் இரண்டே இரண்டு மட்டுமே
எத்iர்காலத்தைக்கூட பிறந்த நேரத்தை கொண்டு சொல்கிறார்கள்
ஆனால் பிறக்குமுன்பே அதன் அடையாளங்களை நான் சொல்கிறேன்
எதைக்கொண்டு என் உறிமையும், திறமையும், கிடைக்கவிருந்த வாய்ப்புகளும் எழுத பட்டதோ
எனக்கு தெரிந்ததெல்லாம் அந்த குழந்தையின் சாதியும் மதமும் மட்டுமே
கண்டுப்பிடித்து கொடுங்கள்!!!

எழுதியவர் : (28-Feb-15, 10:57 pm)
பார்வை : 103

மேலே