வானில் வட்டமிட
உங்கள் கூடுகளிலும்
நீங்கள் கூடுகையிலும்
ஏற்றத்தாழ்வுகள் இல்லை
உங்கள் வண்ணங்களிலும்
புதிரான எண்ணங்களிலும்
வேற்றுமைகள் இல்லை
இடப்பெயர்விலும் சரி
இடர்படுகையிலும் சரி
உங்கள் ஒற்றுமையில்
விரிசல்கள் இல்லை
ஜாதியோ
ஜாதகமோ நீங்கள்
பார்ப்பதும் இல்லை
மதமோ
பணமோ மோக
குணமோ உங்களை
மாற்றுவதும் இல்லை
ஆசைதான்
கறு நிற அழக அழகிகளே
நீ திருடிய கதை போல்
உன் சிறகுகளை நான் திருட
தா தா என யாரையும் யாசிக்காமல்
வா வா என மோகத்தால் பெண்பால் வாசிக்காமல்
போ போ எனும் மனமற்றவனாய்
சுவாசிக்காமல்
கா கா என கரைந்த படி
வானில் வட்டமிட