ஊழலை ஒழிக்க உறுதி கொள்வோம்

ஊழலற்ற நாட்டை நாமும்
உருவாக்க ஓன்று சேர்வோம் !
ஊழலினைச் செய்து வாழ்வோன்
ஒழுக்கமில்லா கீழோன் ஆவான் !
ஊழலினை நாட்டை விட்டே
ஓட ஓட விரட்ட வேண்டும் !
வாழவேண்டும் மக்க ளெல்லாம்
வையத்தில் வறுத்த மின்றி !

அரசுநல உதவித் திட்டம்
ஆங்காங்கே அனைவ ருக்கும்
முறையாகக் கிடைக்கச் செய்து
முன்னேற்றம் காண வேண்டும் !
குறையின்றி மக்கள் வாழ
கொள்கையினை வகுக்க வேண்டும் !
நிறைவாக நமது நாட்டை
நீள்நிலத்தில் உயர்த்த வேண்டும் !

நற்பண்பு நன்ன டத்தை
நற்கல்வி புகட்ட வேண்டும் !
பற்றுகொண்டு நாட்டைக் காக்க
பாடுபட்டே உழைக்க வேண்டும்!
தொற்றிவரும் சாதி நோயை
துரத்தியுமே அழிக்க வேண்டும் !
வற்றியுமே வறுமை யுற்றோர்
வயிறார உண்ணல் வேண்டும் !

கொலைக்கொள்ளை களவும் பொய்யும்
குற்றங்கள் எதுவும் இல்லா
நிலைதன்னை அடைதல் வேண்டும்
நேர்மையுடன் நடத்தல் வேண்டும் !
விளைநிலத்தை விலைக்கு விற்று
வீடுகட்டும் போக்கை மாற்றி
விளைச்சலினைப் பெருக்கு தற்கு
வியூகத்தை அமைத்தல் வேண்டும் !

ஆறுகளில் நீரைத் தேக்கும்
அரும்மணலை அள்வோர் தம்மை ,
ஊறுதனை விளைத்து நிற்கும்
ஊழலினை செய்வோர் தம்மை ,
கூறுபோட்டே அழித்துக் காட்டை
கொடுமைகளை செய்வோர் தம்மை ,
வீறுகொண்டே எதிர்த்தல் வேண்டும்
விடியலைநாம் காணல் வேண்டும் !

ஊழலினை ஒழிப்ப தற்கே
உறுதியுடன் எழவும் வேண்டும் !
காலமெல்லாம் கடமை ஆற்றி
கயமைகளைக் களைதல் வேண்டும் !
வேலையற்ற அனைவ ருக்கும்
வேலைதனைக் கொடுத்தல் வேண்டும் !
நாளைநமது நாட்டை இந்த
நானிலத்தில் உயர்த்த வேண்டும் !

எழுதியவர் : தன்முகநம்பி (28-Feb-15, 6:46 pm)
சேர்த்தது : தன்முகநம்பி
பார்வை : 192

மேலே