தன்முகநம்பி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தன்முகநம்பி |
இடம் | : THARAGAMPATTY |
பிறந்த தேதி | : 20-Feb-1967 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 184 |
புள்ளி | : 33 |
HEADMASTER
நம்பியவர் எல்லாம்
நழுவி விட்டாலும்
நயவஞ்ச கத்தனமாய்
விலகி விட்டாலும்
கவலை கொள்ளாதே - மனமே
கலங்கி நில்லாதே !
கயவரை நம்பாதே - நீயும்
காயென வெம்பாதே! (கவலை...)
உனக்கொரு காலம்
இருக்குது என்றே
உள்ளத்தை முறுக்கேற்று - அந்த
உண்மைக்கு விளக்கேற்று !
உழைபொன் றேதான்
உயர்வைக் கொடுக்கும்
என்பதை நிலைநாட்டு - நெஞ்சில்
நம்பிக்கை ஒலியூட்டு ! (கவலை...)
கலந்தனில் ஏறிக்
கடல்தனில் சென்றால்
கற்றும் வீசிடுமே - கடும்
புயலும் தாக்கிடுமே - அதுபோல்
வசந்தமும் வறட்சியும்
வந்திடும் சென்றிடும்
வாட்டம் கொள்ளாதே - வாழ்வில்
வதங்கி நில்லாதே!
கடிக்க வந்தக்
கொசுவை
அடிக்க மனமில்லை...
உன்னைத் தொட்டுவிட்டு
என்னைத்
தொட்டதால்...!
'பூ" தொடுத்தால் பூவை
ஆனால்...
சூடவில்லை பூவை!
முடியாது என்று நீயும்
முடங்கி விடாதே - திறமை
உனக்குள்ளே நிறைந்திருக்கு
ஒதுங்கிச் செல்லாதே - தோழா
ஒதுங்கிச் செல்லாதே ! (முடியாது...)
செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்து
செயலைச் செய்யுவாய் - நீயும்
அல்லும் பகலும் பாடுபட்டு
அறிவைத் தேடுவாய் - தோழா
அறிவைத் தேடுவாய்! (முடியாது...)
உழைப்பதனால் உள்ளம் என்றும்
கெட்டுப்போகாது நன்மை
விட்டுப் போகாது !
மலைத்து நின்றால் மடியில்வந்து
வெற்றி சேராது - தோழா
விரைந்து போராடு ! (முடியாது...)
அஞ்சிநீயும் விலகி நின்றால்
அமைதி வாராது - வாழ்வின்
சுமைகள் தீராது !
நெஞ்சில் உறுதி கொண்டி
பாசம் காட்டும் விலங்கினைப்பார் - உணவைப்
பகிர்ந்தே உண்ணும் பறவையைப்பார்!
வேசம் போடும் மனிதர்களே ! - நமக்குள்
வேண்டாம் சாதி மதபேதம்!
பிறப்பிடம் வேறே என்றாலும் - நதிகள்
இணைவது எல்லாம் ஓரிடந்தான்!
பிரிவுகள் ஆயிரம் இருந்தாலும் - நாம்
இந்தியத் தாயின் பிள்ளைகள்தாம்!
மதங்கள் என்னும் போர்வையிலே - மனிதன்
மதந்தான் பிடித்தே அலைகின்றான் !
உதவும் எண்ணம் இழந்திட்டான் - நல்
உயர்வைக் காண மறந்திட்டான்!
மொழிகள் ஆயிரம் இருந்தாலும் - நமக்குள்
வேற்றுமை என்பது வேண்டாமே!
மதங்கள் பலவாய் இருந்தாலும் - நம்
மனங்கள் ஒன்றாய் இணையட்டும்!
ஒற்றுமை இன்றி ஒருநாளும் - பெரும்
உயர்வைக் காண்பது