உனக்கொரு காலம் பிறந்திடுமே

நம்பியவர் எல்லாம்
நழுவி விட்டாலும்
நயவஞ்ச கத்தனமாய்
விலகி விட்டாலும்
கவலை கொள்ளாதே - மனமே
கலங்கி நில்லாதே !
கயவரை நம்பாதே - நீயும்
காயென வெம்பாதே! (கவலை...)

உனக்கொரு காலம்
இருக்குது என்றே
உள்ளத்தை முறுக்கேற்று - அந்த
உண்மைக்கு விளக்கேற்று !
உழைபொன் றேதான்
உயர்வைக் கொடுக்கும்
என்பதை நிலைநாட்டு - நெஞ்சில்
நம்பிக்கை ஒலியூட்டு ! (கவலை...)

கலந்தனில் ஏறிக்
கடல்தனில் சென்றால்
கற்றும் வீசிடுமே - கடும்
புயலும் தாக்கிடுமே - அதுபோல்
வசந்தமும் வறட்சியும்
வந்திடும் சென்றிடும்
வாட்டம் கொள்ளாதே - வாழ்வில்
வதங்கி நில்லாதே! (கவலை...)

எழுதியவர் : thanmuganambi (7-May-15, 10:51 pm)
பார்வை : 528

மேலே