வெற்றி கண்டிடு

முடியாது என்று நீயும்
முடங்கி விடாதே - திறமை
உனக்குள்ளே நிறைந்திருக்கு
ஒதுங்கிச் செல்லாதே - தோழா
ஒதுங்கிச் செல்லாதே ! (முடியாது...)

செல்லும் வழியைத் தேர்ந்தெடுத்து
செயலைச் செய்யுவாய் - நீயும்
அல்லும் பகலும் பாடுபட்டு
அறிவைத் தேடுவாய் - தோழா
அறிவைத் தேடுவாய்! (முடியாது...)

உழைப்பதனால் உள்ளம் என்றும்
கெட்டுப்போகாது நன்மை
விட்டுப் போகாது !
மலைத்து நின்றால் மடியில்வந்து
வெற்றி சேராது - தோழா
விரைந்து போராடு ! (முடியாது...)

அஞ்சிநீயும் விலகி நின்றால்
அமைதி வாராது - வாழ்வின்
சுமைகள் தீராது !
நெஞ்சில் உறுதி கொண்டிருந்தால்
நெருப்பும் சுடாது - நீ
நித்தம் போராடு! (முடியாது...)

எழுந்து நீயும் பயணம் செய்தால்
எழுச்சி காணலாம் - வாழ்வில்
மலர்ச்சி பூணலாம் !
விழுதுவிட்டு ஊன்றி நிற்க
வியர்வை சிந்திடு - நாளும்
வெற்றி கண்டிடு ! (முடியாது...)

எழுதியவர் : தன்முகநம்பி (2-Mar-15, 9:48 pm)
சேர்த்தது : தன்முகநம்பி
பார்வை : 553

மேலே