மூடித் திறக்கும் மலர்விழியில் முல்லைபூ

ஆடும் கொடியில் அசைந்திடும் வண்ணப்பூ
மூடித் திறக்கும் மலர்விழியில் முல்லைப்பூ
பாடுது தென்றலோர் பூபாளம் கூந்தலில்
ஓடும்நீ ரோடையும் ஓரா யிரம்பாடும்
வாடிடும் பூக்கள் வசந்தவரம் பெற்றதடி
வாடாப்பூ போன்றவுன் வட்டமுகத் தைப்பார்த்து
தேடுகிறாய் யாரைநீ சொல்

---- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (17-Nov-24, 11:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே